(மன்னார் நிருபர்)
(04-02-2021)
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாந்தை மேற்கு பிரதேச செயலகத்துடன் இணைந்து ‘லட்சுமி கரங்கள்’ அமைப்பினால் 21 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வியாழக்கிழமை காலை 11 மணியளவில் உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தில்,மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது தெரிவு செய்யப்பட்ட 21 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு அமரர் ‘நடராசா மாஸ்டர்’ குடும்பத்தின் உதவியுடன் உலர் உணவுப் பொருட்கள்,சாரி,மற்றும் 1000 ரூபாய் பணம் என்பன வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் மாந்தை மேற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ‘ லட்சுமி கரங்களின்’ தொண்டர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.