கனடாவில் இயங்கிவரும் ‘ரொரன்ரோவின் மனித நேயக் குரல்’ அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் 7ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இணையவழி கருத்தரங்கொன்றில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் உரையாற்றுகின்றார்.
இலங்கைக் கடற்படையினரால் கொலை செய்யப்படுகின்ற அளவிற்கு வளர்ந்துள்ள அராஜகம் மற்றும் தமிழகத்தில் இன்னும் அகதிகள் என்றே அடையாளப்படுத்தப்படுகின்ற ஈழ உறவுகள் ஆகிய இரு முக்கிய கருப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டே இந்த இணையவழிக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கருத்தரங்கிற்கு கனடா உதயன் பத்திரிகை மற்றும் நண்பன் சர்வதேச இணையத்தளம் ஆகியவை ஊடக ஆதரவை வழங்குகின்றன. மேலதிக விபரங்களுக்கு இத்துடன் உள்ள பிரசுரத்தைப் பார்க்கவும்