கனடாவில் ரொரன்ரோ மாநகரில் அமைந்துள்ள ரொரன்ரோ பல்கலைக் கழகத்தில் அமையவுள்ள தமிழ் இருக்கை நிதிக்காக நேரலை ஒளிபரப்பாக (LIVE TELECAST ) VIBRANT HOSPITALITY GROUP – சங்கர் நல்லதம்பி அவர்களின் ஆதரவில் கனடா CINE MEDIA தமிழோசை வழங்கும் ‘இன்னிசை வார்ப்புக்கள்’ என்னும் முழு நீள இசை நிகழ்ச்சி எதிர்வரும் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
மேற்படி நிகழ்வை அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் தொகுத்து வழங்க, தமிழ்நாட்டில் பிரபலங்களாகத் திகழும் பாடக பாடகிகள் மற்றும் வாத்தியக் கலைஞர்கள் மற்றும் இலக்கியவாதிகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.
மேற்படி அற்புதமான இசை மற்றும் நடன விழாவைக் கண்டு களித்து பின்னர் தமிழ் இருக்கைக்கு உங்கள் நன்கொடைகளை வழங்கும் முகமாக விளம்பரப் பிரசுரத்தில் காணப்படும் நேரலை ஒளிபரப்பாக (LIVE TELECAST ) செய்யவுள்ள தொலைக்காட்சிகள் மற்றும் ஊடகங்கள் ஆகியவற்றின் விபரங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
மேற்படி பல்கலைக் கழகத்தில் அமையவுள்ள தமிழ் இருக்கைக்கு நமது தமிழர் சமூகம் வழங்கவேண்டிய தொகை 3 மில்லியன் டாலர்கள். மொத்தத் தொகையில் கிட்டததட்ட 80 வீதமான பணம் வெற்றிகரமாக திரட்டப்பட்டுள்ளது. மிகுதி 20 வீதத்தையும் திரட்டும் வகையில் ரொரன்ரோ தமிழ் இருக்கைக்கான குழு தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது. எனவே இந்த நற்காரியத்திற்கு நல்லெண்ணம் கொண்ட அனைவரும் திரண்டு வந்து நிதி பெருகி அந்த 3 மில்லியன் டாலர்கள் இலக்கை அடைவதற்கு கரங்கோர்க்கும் படி மேற்படி தமிழ் இருக்கை குழு அழைக்கின்றது.
தொலைபேசி இலக்கம் 416 707 9104