ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள்
“ராஜயோகம்”
Dr. K. RAM.Ph.D (USA)
தொடர்புக்கு: 0091-9840160068, 99404 31377
மேஷம் :
தகுதியோடு வலம் வரக்கூடிய மிகுதியான வாரம். வெகுதி பெருகும். வாகன செலவு ஏற்படும். புதிய நட்பு உருவாகும். உத்தியோகம் இடமாற்றம் ஏற்படும். விருந்தினர்கள் வருகை உண்டு. குடும்ப அன்யோன்யம் கூடும். உடல்நலனில் அக்கறை தேவை. அடுத்த நபரால் ஆதாயம் உண்டு. திடீர் செலவு ஏற்படும்.
வழிபட வேண்டிய தெய்வம்: சந்திரபகவான்
அதிர்ஷ்ட எண்: 6, 3, 2, 1; அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம். அதிர்ஷ்ட எழுத்துக்கள்: Y, L;
ரிஷபம் :
சினத்தைத் தவிர்த்து பணத்தை சேர்க்கக் கூடிய பக்குவமான வாரம். வியாபாரம் லாபம் தரும். உறவினர்களால் உதவி கிட்டும். உயர்கல்வி ஆர்வம் தேவைகள் அதிகரிக்கும். மற்றவர்களால் அனுகூலம் உண்டு. உடல் ஆரோக்கியம் கூடும். விமங்கள செய்தி வரும். மாணவர்கள் உற்சாகம் கூடும். மனைவியின் அன்பு அதிகரிக்கும். நிதானம் நல்லது.
வழிபட வேண்டிய தெய்வம்: வீர விநாயகர்
அதிர்ஷ்ட எண்: 9, 6, 4, 7; அதிர்ஷ்ட நிறம்: வெண்பட்டு. அதிர்ஷ்ட எழுத்துக்கள்: S, H;
மிதுனம் :
முடியாத விஷயங்களைத் தெளிவாகச் செய்து காட்டக்கூடிய முன்னேற்றமான வாரம். பெற்றவர்கள் பாராட்டு கிட்டும். வினோதமான எண்ணங்கள் விலகும். புதிய முயற்சிகள் பலன் தரும். பிள்ளைகள் தொல்லை அதிகரிக்கும். மனைவியால் மருத்துவச் செலவு உண்டு. புண்ணியஸ்தலம் செல்ல வேண்டி வரும். பழைய நண்பரால் பணவரவு உண்டு.
வழிபட வேண்டிய தெய்வம்: பாதள பைரவர்
அதிர்ஷ்ட எண்: 5, 0, 5, 4; அதிர்ஷ்ட நிறம்: அரக்கு. அதிர்ஷ்ட எழுத்துக்கள்: H, A;
கடகம் :
நாட்டுல உள்ளவங்க நடுநிலையோடு பாராட்டக் கூடிய நியாயமான வாரம். வினோதமான எண்ணங்கள் பூர்த்தியாகும். கன்னிப் பெண்களுக்கு சுபச் செய்தி வரும். கால்நடைகளால் பலன் உண்டு. ஸ்டேஷனரி தொழில் லாபம் தரும். பிள்ளைகளால் செலவு அதிகரிக்கும். ஆடை, அணிகலன்கள் சேரும். மனச்சஞ்சலம் ஏற்படும். பழைய கடன் பஞ்சாயத்து
மூலம் தீர்வுக்கு வரும்.
வழிபட வேண்டிய தெய்வம்: வீர அனுமன்
அதிர்ஷ்ட எண்: 8, 5, 1, 3; அதிர்ஷ்ட நிறம்: நீலம். அதிர்ஷ்ட எழுத்துக்கள்: F, L;
சிம்மம் :
கச்சிதமான நன்மைகள் நிச்சயமாகக் கிடைக்கக் கூடிய அற்புதமான வாரம். உத்தியோகப் பெண்களுக்கு பதவி உயர்வு கிட்டும். சம்பள பாக்கிகளும் வந்து சேரும். பொருளாதாரம் உயரும். முதலீடு உண்டாகும். தொலை தூர தொடர்பு லாபம் தரும். பாக்கெட்டில் காசு கரையாது. நினைத்த்து நடக்கும். அதிதேவதை வழிபாட்டால் ஐஸ்வர்யம் கூடும். பெற்றோர்களால் பாராட்டுப் பெறுவீர்கள். செலவுகள் குறையும்.
வழிபட வேண்டிய தெய்வம்: சித்ரகுப்தர்
அதிர்ஷ்ட எண்: 2, 4, 5, 9 அதிர்ஷ்ட நிறம்: பொன் நிறம்; அதிர்ஷ்ட எழுத்துக்கள்: K, Q;
கன்னி :
அருளும், பொருளும் சேரக்கூடிய ஆறுதலான வாரம். மகிழ்ச்சி அதிகரிக்கும். விவேகம் அதிகரிக்கும். கலை ஈடுபாடு அதிகரிக்கும். கமிஷன் தொழில் திருப்தி தரும். வாகன மாற்றம் உண்டு. வரவுகள் திருப்தி தரும். இடமாற்றம் நன்மை தரும். உத்தியோக உயர்வு உண்டு. சச்சரவுகள் அகலும். குடும்ப கௌரவம் உயரும். ஆபரணச் சேர்க்கை
உண்டு. மறைமுக எதிர்ப்பு விலகும்.
வழிபட வேண்டிய தெய்வம்: ஸ்ரீ ராமபிரான்
அதிர்ஷ்ட எண்: 0, 7, 2, 9; அதிர்ஷ்ட நிறம்: சில்வர் கிரே. அதிர்ஷ்ட எழுத்துக்கள்: D, X;
துலாம் :
பாசமும், நேசமும் பெருகக்கூடிய பக்குவமான வாரம். தங்க நகைகள் சேரும். கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. பொருள் இழப்பு ஏற்படும். சகோதரியால் அனுகூலம் உண்டு. ஆபரணச் சேர்க்கை உண்டு. கலைத்துறையில் திருப்பம் உண்டு. மாணவர்கள் கவனம் தேவை. கடன் சுமை அதிகரிக்கும். காரியத்தடை ஏற்படும். உறவினர்களால் நன்மை உண்டு. எதிரிகளால் தொல்லை உண்டாகும். பிரார்த்தனையால் பலன் உண்டு.
வழிபட வேண்டிய தெய்வம்: குரு பகவான்
அதிர்ஷ்ட எண்: 2, 1, 0, 8; அதிர்ஷ்ட நிறம்: குங்கும கலர். அதிர்ஷ்ட எழுத்துக்கள்: R, D;
விருச்சிகம் :
செல்வமும் புகழும் சேர்ந்து கிடைக்கக்கூடிய சிறப்பான வாரம். பணியில் உயர்வு உண்டு. புதிய பதவிகள் கிட்டும். உடல் நலம் சீராகும். மற்றவரால் பாராட்டுப்படுவீர்கள். பயணத்தால் அனுகூலம் உண்டு. குடும்ப அன்யோன்யம் கூடும். பொறுப்புகள் கூடும். பொருள் வரவு திருப்தி தரும். இடமாற்றம் நன்மை தரும்.
வழிபட வேண்டிய தெய்வம்: ஐங்கரன்
அதிர்ஷ்ட எண்: 1, 2, 6, 9 அதிர்ஷ்ட நிறம்: நீலம்; அதிர்ஷ்ட எழுத்துக்கள்: X, N;
தனுசு :
அறிமுகம் இல்லாதவர்; மூலமாக ஆதாயம் கிடைக்கக் கூடிய அற்புதமான வாரம். குதூகலப் பயணம் உண்டு. நிதி நிறுவனம் லாபம் தரும். தொழில் உற்பத்தி அதிகரிக்கும். இனிக்கும் சம்பவம் அமையும். விவசாய விளைச்சல் அதிகரிக்கும். தொழில் நிம்மதி கொடுக்கும். பெண்களுக்கு யோகம் கூடும். நல்வர் நட்பு உருவாகும். தோல்வி நிலை மாறும் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.
வழிபட வேண்டிய தெய்வம்: குபேர பகவான்
அதிர்ஷ்ட எண்: 7, 4, 6, 9 அதிர்ஷ்ட நிறம்: செம்மஞ்சள்; அதிர்ஷ்ட எழுத்துக்கள்: G, C
மகரம் :
திடமான முடிவுகளைத் தீர்மானிக்கக் கூடிய அற்புதமான வாரம். கலகலப்பான செய்திகள் வந்து சேரும். கௌரமான வாரம். பணப்பற்றாக்குறை நீங்கும். மாற்று இனத்தவர் வாழ்வு கிட்டும். மதிப்பு உயரும். மகான்களின் சந்திப்பு கிட்டும். பெற்றோர் வழி மருத்துவச் செலவு உண்டு. கணவன், மனைவி கௌரவம் உயரும். மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். சுறுசுறுப்பு அதிகமாகும். ஆரோக்கியம் அதிகரிக்கும்.
வழிபட வேண்டிய தெய்வம்: அய்யனார் சுவாமி
அதிர்ஷ்ட எண்: 8, 6, 2, 9; அதிர்ஷ்ட நிறம்: வைலட், அதிர்ஷ்ட எழுத்துக்கள்: D, O.
கும்பம் :
சுமையான வாழ்க்கை சுகமாக மாறக்கூடிய மகத்தான வாரம். முத்தான வாய்ப்புகள் பெருகும். பிள்ளைகாளல் பெருமை சேரும். பகையாளிகளின் நிலை மாறும். பெண் வழிப் பிரச்சனை முடிவுக்கு வரும். முன்னேற்றம் அதிகரிக்கும். கௌரவமான வாரம்.. கலைத் தொழில் திருப்பத்தை ஏற்படுத்தும். ஷேர் மார்க்கெட் லாபம் தரும். கட்டிட தொழில் கவனம் தேவை. புதிய முதலீடு உருவாகும். கௌரவம் உயரும். கடன் தொல்லை தீரும்.
வழிபட வேண்டிய தெய்வம்: காரியசித்தி அனுமந்தசுவாமி
அதிர்ஷ்ட எண்: 1, 3, 7, 1; அதிர்ஷ்ட நிறம்: யானை நிறம், அதிர்ஷ்ட எழுத்துக்கள்: B, Z.
மீனம் :
பரபரப்பாக செயல்பட்டு பணவரரை சேர்த்துக்கொள்ளக் கூடிய பக்குவமான வாரம். நட்டம் இல்லாத நாள். பட்டம் பதவி வந்து சேரும். யோகமான வாரம்.. பெற்றவர்கள் பாராட்டு கிட்டும். வினோதமான எண்ணங்கள் விலகும். புதிய முயற்சிகள் பலன் தரும். புண்ணியஸ்தலம் செல்ல வேண்டி வரும். பிள்ளைகள் தொல்லை அதிகரிக்கும். பழைய நண்பரால் பணவரவு உண்டு. சகோதர வகையில் சச்சரவு ஏற்படும். சட்டம் சாதகமாகும். மனைவியால் மருத்துவச் செலவு உண்டு.
வழிபட வேண்டிய தெய்வம்: கஜமுக கணபதி
அதிர்ஷ்ட எண்: 4, 2, 0, 7 அதிர்ஷ்ட நிறம்: அரக்கு, அதிர்ஷ்ட எழுத்துக்கள்: H, T.