யா/சித்தன்கேணி ஸ்ரீ கணேசா வித்தியாலயத்தில் கடந்த வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தியடைந்த 04 மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வானது 09-02-2021 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது.
இதற்கான நிதி அனுசரனையினை Ratnam foundation மற்றும் சித்தன்கேணி – கனடா ஒன்றியம் என்பன வழங்கியிருந்ததோடு அதன் பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்திருந்தனர். இந்நிகழ்வில் மாணவர்களுக்கு பணப்பரிசில்கள் மற்றும் கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.