(மன்னார் நிருபர்)
(11-02-2021)
மன்னார் ஆண்டாங்குளம் றோமன் கத்தோழிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை(11) காலை ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலையின் பழைய மாணவனும் தற்போது லண்டனில் வசித்து வரும் கணேசன் சிவநேசன் வழங்கிய ஒரு இலட்சம் ரூபாய் நிதி உதவியில் குறித்த விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் ஆர்.லுமாசிறி தலைமையில் பழைய மாணவர்களது பங்கு பற்றுதலுடன் பழைய மாணவர் சங்கத்தினரால் பாடசாலைக்கான விளையாட்டு உபகரணங்கள் பாடசாலை அதிபர் எம்.கிருஸ்ரியன் முன்னிலையில் வழங்கி வைக்கப்பட்டது.