ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் இணைத்தலைமை நாடுகளில் ஒன்றாக கனடா இருப்பதனால் தமிழ் மக்கள் சார்ந்து குரல் கொடுப்பதற்கான தார்மீகக் கடமை கனடாவிற்கு இருக்கிறது என்பதை வலியுறுத்தியே இந்த வாகனப் பேரணி இடம்பெற இருக்கின்றது.
ஐனவரி 27 அன்று வெளிவந்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் பரிந்துரைகளை இணைத்தலைமை நாடுகள் ஊடாகத் தீர்மானம் ஒன்றில் வரைவாக கொண்டுவருமாறு கனேடிய அரசை கனேடியத் தமிழர் சமூகம் வலியுறுத்தி நிற்கின்றது.
குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் பரிந்துரைப்படி சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் பந்தியை உள்ளடக்கிய தீர்மான வரைவினை இணைத்தலைமை நாடுகளுடன் இணைந்து தயாரிக்குமாறு கனடிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் முகமாகவே இந்த வாகனப் பேரணி நடைபெற இருக்கிறது.
இந்த வாகனப் பேரணியில் போதிய அளவு தமிழ் மக்களைக் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்களால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அத்தோடு கனேடிய அரசிற்கு கொடுக்கப்படும் அழுத்தங்களின் இன்னுமொரு வடிவமாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை ஆணையாளரின் பரிந்துரைகள் அனைத்தையும் தீர்மான வரைபில் உள்ளடக்குமாறு கோரி கனேடிய வெளிவிவகார அமைச்சருக்கு இணையவழி மனு ஒன்றும்-மனுக்களுக்கான கனேடிய அரசாங்க இணையப்பக்கத்தில் பொதுமக்கள் கையொப்பத்திற்காக தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இம்மனுவிற்கான இலக்கம் E-3168 ஆகும்.
இந்த மனுவை நீங்கள் கையெழுத்திட்டவுடன் மனுவில் நீங்கள் தான் கையொப்பம் இட்டீர்கள் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், அதி கூடிய பட்சம் ஐந்து நிமிடங்களுக்குள் நோ ரிப்ளை(No Reply) எனும் முகவரியிலிருந்து உங்கள் மின்னஞ்சலுக்கு ஒரு மின்னஞ்சல் வந்து சேரும்.
அந்த மின்னஞ்சலில் “இந்த மனுவை பூர்த்தி செய்வதற்கு உங்கள் ஆதரவை உறுதிப்படுத்துங்கள்” என்ற வாசகங்கள் அமைந்த இணைப்பினை நீங்கள் அழுத்தினால் நீங்கள் இட்ட கையொப்பம் கணக்கில் சேர்க்கப்படும். ஆகவே, இதனை கருத்தில் கொண்டு நீங்கள் மனுவில் கையெழுத்திட்டதோடு, என் கடமை முடிந்து விட்டது என இருந்து விடாமல் உங்கள் மின்னஞ்சலைத் திறந்து அந்த இணைப்பினை அழுத்தி உங்கள் கையொப்பத்தை உறுதிப்படுத்துங்கள்.
மனுவிற்கு ஆதரவான கையொப்ப எண்ணிக்கை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக இருக்கின்றதோ அவ்வளவுக்கு அவ்வளவு, எமது அழுத்தம் கனடிய நாடாளுமன்றத்தில் பிரதிபலிப்பதுடன் நம் இனத்தின் குரலும் ஓங்கி ஒலிக்கும். ஆகவே இதனைத் தாயகத்திற்கான உங்கள் தலையாய கடமையாக நினைத்து செயற்படுமாறு ஏற்பாட்டாளர்கள் அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக் கொள்கின்றனர்.
மனுவின் இணையப்பக்கத்தின் இணைப்பு.
https://petitions.ourcommons.ca/en/Petition/Details?Petition=e-3168
வாகனப் பேரணி பற்றிய விபரம்
காலம்: புதன்கிழமை, பெப்ரவரி 17, 2021
ரொறன்ரோவிலிருந்து காலை 7:30 மணிக்கு , Markham&Steeles சந்திப்பில் கூடி காலை 8 மணிக்கு வாகனப் பேரணி ஆரம்பமாகும். மொன்றியலிலிருந்து காலை 10:30 மணிக்கு வாகனப் பேரணி முருகன் கோவிலில் இருந்து ஆரம்பமாகும்.
ரொறன்ரோ மொன்றியல் பேரணிகள் இரண்டும் பிற்பகல் 1 மணிக்கு ஒட்டாவா வின்சன்ற் மசே பூங்காவில் சந்தித்த பின் பிற்பகல் 1:30 மணிக்கு நாடளுமன்றம் நோக்கி நகரும்
தொடர்புகளுக்கு:
மகாஜெயம் – 647-262-5587
மரியராசா – 416-669-6437
றெஜி – (மொன்றியல்) – 514-651-1419
றோய் – 416-457-1633