ஒன்றாரியோ மாகாணத்தின் சுகாதார தலைமை மருத்துவ அதிகாரியுடன் கலந்தாலோசித்து, பணிமுடக்கம், மக்களை வீட்டில் இருக்குமாறு பணிக்கும் உத்தரவு, பொதுசுகாதார மற்றும் பணியிட பாதுகாப்பு போன்றவற்றில் ஒன்ராறியோ அரசு பிராந்திய அடிப்படையிலான அணுகுமுறையைக் கையாண்டு வருகிறது.
இவ்வாறு பாதுகாப்பாக செயற்படும்போது, ஒன்ராறியோவிலுள்ள ஒவ்வொரு பிராந்தியங்களிலும் பணிமுடக்க நடவடிக்கைகளிலுள்ள இறுக்கங்களில் தளர்வுகளை ஏற்படுத்தி ஒன்ராறியோவினை கோவிட்-19 ஆபத்திலிருந்து படிப்படியாக பாதுகாப்பாக திறந்து வைக்க முடியும்.
ரொறன்ரோ, பீல், யோர்க் பிராந்தியங்களைப் பொறுத்தவரை, 2021 பிப்ரவரி 22ஆம் திகதி திங்கட்கிழமை வரைக்கும் அனைவரையும் வீட்டிலேயே இருக்குமாறு போடப்பட்ட உத்தரவு தொடர்ந்தும் அமலில் இருக்கும். இறுதி முடிவுகள் அப்போதைய சூழ்நிலைகளுக்கமைய பொது சுகாதார தரவு மதிப்பாய்வுகளின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும்.
மக்களை வீட்டில் இருக்குமாறு பணிக்கப்பட்டுள்ள மானிலத்தின் பொது சுகாதார பிரிவில் அடங்கும் பகுதிகளில், வாடகைக் குடியிருப்பாளர்களை வீட்டு உரிமையாளர் வீட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான சட்ட நடைமுறைகள் இடைநிறுத்தி வைக்கப்படும். இது மக்கள் அவர்கள் வீடுகளிலிருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றப்படுவதைத் தடுக்கும். மக்களை வீட்டில் இருக்குமாறு விடுக்கப்பட்ட உத்தரவு மீளப் பெறப்பட்ட பின்னர், வாடகைக் குடியிருப்பாளர்களை வீட்டு உரிமையாளர் வெளியேற்றுவதற்கான சட்ட நடைமுறைகள் வழமைக்குத் திரும்பும்.
விஜய் தணிகாசலம், சட்டமன்ற உறுப்பினர்
ஸ்காபரோ – றூஜ் பார்க்