கடந்த கால யுத்த நிலைமைகளினால் பாதிக்கப்பட்ட கண் பார்வை திறனை இழந்து தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாகவும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் வாழ்ந்து வரும் தமது 10 பயனாளி குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்களை தந்துதவுமாறு வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தினால் வட்டு இந்து வாலிபர் சங்கத்திடம் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இன்றைய தினம் தலா ரூபா 5000 பெறுமதியில் 10 குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளதுடன்.
முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளத்தில் அமைந்துள்ள கடந்த கால யுத்த நிலைமை களினால் முள்ளம் தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களை பாரமரித்து வரும் உயிரிழை அமைப்பின் பயனாளிகளுக்கு அவர்களின் உணவுத் தேவையினை பூர்த்தி செய்து கொள்வதற்காக ரூபா 30,000 பெறுமதியில் உலர் உணவுப் பொருட்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.