(மன்னார் நிருபர்)
(13-02-2021)
மன்னார் மாவட்டத்தின் வரலாற்று சிறப்பு மிக்க மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் 150 வது ஆண்டு நிறைவு யூபிலி விழா இன்று சனிக்கிழமை (13) காலை பாடசாலையில் வெகு விமரிசையாக இடம் பெற்றது.
குறித்த பாடசாலையின் 150 ஆவது ஆண்டு நிறைவு யூபிலி விழாவை முன்னிட்டு கடந்த ஒரு வருடமாக இவ் பாடசாலையில் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்ற நிலையில் இன்று சனிக்கிழமை(13) 150 ஆவது ஆண்டு நிறைவு விழா நினைவு கூறப்பட்டது.
‘பழையவற்றை நன்றியுணர்வுடன் நினைவு கூறுவோம்’ எனும் தொணிப்பொருளில் பாடசாலையில் இன்று சனிக்கிழமை காலை 9 மணியளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னான்டோ ஆண்டகை தலைடையில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந் பாடசாலையின் முதல்வர் அருட்சகோதரர் ரெஜினோல்ட் தலைமையில் யூபிலி நிறைவு நிகழ்வுகள் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னான்டோ ஆண்டகை, அமல மரி தியாகி சபையின் மாகாண தலைவர் அருட்பணி இயூஜின் பெனடிக்ற் அடிகளார், இலங்கையின் மாகாண தலைவர் அன்பு சகோதரர் சபையைச் சேர்ந்த அருட்சகோதரர் அந்தனி கிறிஸ்துராஜன், டிலாசால் சபையைச் சார்ந்த அருட்சகோதரர் ஏ.கிறிஸ்றி குரூஸ் , மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஏ.விக்டர் சோசை அடிகளார்,சர்வ மத தலைவர்கள், வட மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டீமெல் லெம்பேட், வட மாகாண கல்வி திணைக்கள பணிப்பாளர் எஸ்.உதயகுமார் , மன்னார் கல்விப் பணிப்பாளர் கே.ஜே .பிரட்லி உற்பட பழைய மாணவர்கள்,மாணவர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் பாடசாலையில் ஆரம்ப உருவாக்கதிற்கு உதவிய சபைகள் மற்றும் நபர்களின் பெயரில் அமைக்கப்பட்ட கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டதோடு, 150 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு அமைக்கப்பட்ட நினைவு தூபீ மற்றும் நுழைவாயில் தொகுதியும் திறந்து வைக்கப்பட்டது.
அதே நேரத்தில் மணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு என கனடா மற்று அமேரிக்காவை சேர்ந்த பழைய மாணவர்களினால் வழங்கப்பட்ட அதி நவீன வசதிகள் கொண்ட பெருமதியான 5 விணைத்திறன் வகுப்பறைகளும் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டு,நிகழ்வுகள் இடம் பெற்றதோடு பாடசாலை யூபிலி நூல் வைபவ ரீதியாக வெளியீடு செய்து வைக்கப்பட்டதோடு, நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.