தற்போதைய கோவிட்-19 நோய்த்தொற்று காரணமாக மரணங்கள் தினமும் சம்பவிக்கின்றன. கனடாவின் பிரதமரும் மற்றும் மாகாணங்களின் முதல்வர்களும் மருத்துவ அதிகாரிகளும் நகரங்களின் நகர பிதாக்களும் தினமும் இந்த மரணங்கள் தொடர்பாக அறிக்கைகளை வெளியிட்ட வண்ணம் உள்ளார்கள். ஆனால் கோவிட்-19 அகன்று செல்வதாகத் தெரியவில்லை.
ஆனால் இன்னொரு பக்கத்தில் கடந்த கால் அரைநூற்றாண்டுகளுக்கு மேலாக உலகெங்கும் போதை வஸ்த்து பாவனை அதிகரித்து தினமும் உலகெங்கும் இளைஞர்களும் யுவதிகளும் மரணித்த வண்ணம் உள்ளார்கள்.
இவ்வாறானவர்கள் எங்கே மரணிக்கின்றார்கள் என்றால், இருட்டில் தான். அவர்கள் போதை வஸ்த்துக்கு அடிமையாகிய சில நாட்களில் தனிமைப் பட்டுப் போயிவிடுகின்றார்கள். போதை வஸ்த்து பாவனை உள்ள சிலரை நண்பர்களாக ஏற்றுக்கொள்கின்றார்கள். அதனால் இவர்களுடைய மரணங்கள் கூட இருட்டிலேயே சம்பவிக்கின்றன என்று எழுதியுள்ளது, கனடாவின் தேசிய பத்திரிகைகளில் ஒன்றான ‘The Globe and Mail”
கடந்த ஆண்டு கனடாவில் அளவிற்கு அதிகமான போதை வஸ்த்து பாவனையால் மரணத்தை தழுவியவர்கள் எண்ணிக்கை 5000 இற்கும் அதிகம் என்று கனடாவின் முன்னணி தேசிய ஆங்கில தினசரியான ‘The Globe and Mail” முன்பக்கச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில் தாங்கள் சேகரித்த 100 பேரின் புகைப்படங்கள் மற்றும் அவர்கள் பற்றிய விபரங்கள் ஆகியவற்றையும் குறிப்பிட்டுள்ளது.
இந்த 100 பேரில் பலர் படித்தவர்களாகவும், நல்ல பணிகளில் அமர்ந்திருந்தவர்கள் என்றும், சிலர் பாடகர்கள் மற்றும் கலைஞர்களாக இருந்தார்கள் என்பதும் தெளிவாகியுள்ளது. இந்தச் செய்தியில் கவலைக்குரிய வியடம் என்னவென்றால் இவ்வாறு அளவிற்கு மிஞ்சிய போதை வஸ்த்து பாவனை காரணமாக மரணித்த சில தமி;ழ் இளைஞர்களின் பெயர்களும் இந்த பட்டியலில் அடங்கியுள்ளன என்பதே.
இவ்வாறான இந்த அளவிற்கு மிஞ்சிய போதை வஸ்த்து பாவனையால் மரணமடைவதற்கான காரணங்களையும் இந்த பத்திரிகை எழுதியுள்ளது. அதில் இந்த போதை வஸ்த்துக்கள் அதிகளவில் வீதி ஓரங்களிலேயே விற்கப்படுகின்றன என்றும் இவ்வாறான போதைப் பொருள் பாவனையின விளைவாக 2016 ம் ஆண்டு ஜனவரி முதல் 15,000 கனேடியர்கள் இறந்துவிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த இறப்புகளில் மூன்றில் ஒரு பங்கு – 5,000 க்கும் அதிகமானவை – கனடாவில் அதிகளவு இந்தியர்களும் கனடிய மூத்த குடியினரும் வாழும் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தில் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதைத் தவிர மேற்படி மாகாணத்தில் கடந்த ஜூலை மாதத்தில் ஃபெண்டானைல் என்னும் போதை மருந்து பயன்பாட்டிற்கு அடிமையானர்களினாலும் இந்த மாகாணம் அதன் மிக மோசமான பாதிப்புக்களைச் சந்தித்தது என்றும் கூறப்படுகின்றது
ஆனால் போதைப்பொருளைச் சுற்றியுள்ள பாதிப்புக்களே அதனைப் பாவிப்;பவர்களை மிகவும் பாதிக்கின்றுது என்றும் இதனால் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை சமூகம் ஒதுக்கி வைப்பதும் ஆனால் அவர்கள்; போதைப்பொருட்களை ஒருபோதும் ஒதுக்கி வைக்க முன்வருவதில்லை என்றும் மேற்படி பத்திரிகை தனது செய்திக் குறிப்பில் எழுதியுள்ளது.
இந்த போதைப் பொருள் பாவனையாளர்களை குறை சொல்லுவது மற்றவர்களுக்கு எளிதாக்குகிறது ஆனால் அது தொடர்டபான சரியான செய்தியைப் பெறுவது கடினமானது என்றும் இதனாலே அவர்கள் மிக விரைவாக மரணத்தை தழுவுகின்றார்கள் என்றும் கனடாவின் மனநல மருத்துவரும் இளைஞர் போதை மருந்து நிபுணருமான டாக்டர் பூயா அசார் மேற்படி பத்திரிகையாளருக்கு தெரிவித்தார்.
போதைப் பொருட்களுக்கு அடிமையானவரை நாம் எப்படி காப்பாற்ற முடியும் அல்லது எவ்வாறு அவர்களை சமூகத்திற்கு மீண்டும் கொண்டு வருவது என்பதை நாம் ஆராய வேண்டும். அப்போது தான் அவர்களை நாம் மரணத்திலிருந்து காப்பாற்றலாம். “உங்களுக்கு முன்னால் இருக்கும் இளைஞரைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் முக்கியம், மேலும் அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது அவர்களின் வாழ்க்கை சிக்கலானது … சில சமயங்களில் நாங்கள் அதை எளிமைப்படுத்தி அவர்கள் ஒரு இளைஞன் என்று கூறுகிறோம்,” என்று அவர் கூறினார். அறிகுறிகளுக்கு சிகிச்சையளிப்பது மட்டுமல்லாமல், மூல காரணங்களை நிவர்த்தி செய்வதன் மூலமும் மேற்படி மோசமான பழக்கத்திற்கு உள்ளானவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றலாம் என்று அந்த மருத்துவர் கூறியுள்ளார்..
“ஆனால் நீங்கள் நம்பிக்கையை வளர்ப்பதற்கும் நல்லுறவை உருவாக்குவதற்கும் நேரம் ஒதுக்கும்போது, நாங்கள் கருத்தில் கொள்ளாத உண்மையான பாதிப்புக்கள் அடிமையானவர்களுக்கு இருக்கலாம் என்பதை நாங்கள் அடிக்கடி உணர்கிறோம் … கடைசியாக எனக்கு முன்னால் ஒரு இளைஞன் இருந்தான். அவன் போதை வஸ்த்து அடிமையானதை நான் நேரில் கண்டேன். ஆனால் அவனை என்;னால் காப்பாற்ற முடியாமல் போய்விட்டதே என்று நாம் பின்னர் கவலைப்படுவதிலும் பார்க்க இன்றே அல்லது நாளை அந்த இளைஞனை காப்பாற்றும் அல்லது அந்த போதை மருந்து பயன்படுத்தும் நிலையிலிருந்து விடுவித்துக் கொள்ள நாம் தனியாகவோ அன்றி குழுவாகவோ பணியாற்ற வேண்டும் என்றும் சில மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.