நேற்று முன்தினம் புதன்கிழமை மதியத்திற்கு அப்பால் ஒட்டாவா மாநகரில் உள்ள கனடிய பாராளுமன்ற வளாகத்திற்கு முன்பாகவும் அனைச் சுற்றிய வீதிகளிலும் ரூபவ் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொடியான புலிக்கொடிகளை பறக்கவிட்ட வண்ணம் சுமார் 150 வாகனங்களில் கனடா வாழ் தமிழ் மக்கள் தங்கள் குரல்களை எழுப்பிய வண்ணம் இலங்கை அரசுக்கு எதிரான கோசங்களை சொல்லியபடி ஒன்று கூடி பேரணி நடத்தினர். இந்த பேரணியின் முக்கிய நோக்கமாக திகழ்ந்தது “இலங்கையில் 2009ம் ஆண்டு மற்றும் அதனைத் தொடர்ந்து இலங்கை அரசு நிகழ்த்திய தமிழ் மக்கள் மீதான படுகொலைகள்ரூபவ் அவை தொடர்பான போர்க்குற்றம் ஆகியவற்றுக்க தண்டனை வழங்கும் வண்ணம் ரூபவ் இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தின் முன் நிறுத்தி விசாரணைகளை நடத்த வேண்டும. இதற்கு கனடிய அரசு தனது ஆதரவை வழங்கவேண்டும்” என்பதே ஆகும்.
மேற்படி வாகனப் பேரணியில் பங்கெடுத்த 150 வாகனங்கள் ரொரன்ரோரூபவ் மொன்றியால் மற்றும் ஒட்டாவா ஆகிய நகரங்களில் இருந்து செனறு; பங்கேற்றன. புதன்கிழமை நடைபெற்ற வாகன பேரணியின் இறுதியில் அமைப்புக் குழுவினரால் தயாரிக்கப் பெற்ற மகஜர் ஒன்று தமிழ்பேசும் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஹரி ஆனந்தசங்கரியிடம் கையளிக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இறுதியில் கனடிய தலைநகரமான ஒட்டாவாவில் அமைந்துள்ள இலங்கை உயர் தூதரகத்திற்கு முன்பாகவும் அன்று அங்கு கூடியவர்களினால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பெற்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.