கண்டிக்கு விஜயம் செய்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (2021.02.19) முற்பகல் அங்கு வழிபாட்டில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.
ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்த கௌரவ பிரதமரை தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெல அவர்கள் வரவேற்றார். அதனை தொடர்ந்து வழிபாட்டில் ஈடுபட்டு ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.
தலதா மாளிகையில் வழிபாட்டில் ஈடுபட்டதை தொடர்ந்து கௌரவ பிரதமர் மல்வத்து மஹா விகாரை பீடத்தின் மஹாநாயக்கர் வணக்கத்திற்குரிய திப்படுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரரை சந்தித்து ஆசீ பெற்றார்.
அங்கு கௌரவ பிரதமர் மல்வத்து பீடத்தின் அனுநாயக்கர் திம்புல்கும்புரே ஸ்ரீ சரணங்கர விமலதம்ம தேரர் மற்றும் மல்வத்து பீடத்தின் அனுநாயக்கர் நியங்கொட விஜிதசிறி தேரர் ஆகியோரை சந்தித்து நலன் விசாரித்தார்.
அதனை தொடர்ந்து அஸ்கிரி மஹா விகாரைக்கு விஜயம் செய்த கௌரவ பிரதமர், அஸ்கிரி மஹா விகாரை பீடத்தின் மஹாநாயக்கர் வரகாகொட தம்மசித்தி ஸ்ரீ பஞ்ஞானந்த ஞானரதனாபிதான தேரரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார்.
இதன்போது பதுளை முதியங்கன ரஜ மஹா விகாராதிபதி கலாநிதி முருத்தெனியே தம்மரதன தேரரும் பங்கேற்றிருந்தார்.அஸ்கிரி கெடிகே ரஜமஹா விகாரைக்கு விஜயம் செய்த கௌரவ பிரதமர் அஸ்கிரி பீடத்தின் அனுநாயக்கர் வெடறுவே உபாலி தேரரையும் சந்தித்து ஆசி பெற்றார்.
தொடர்ந்து அஸ்கிரி மஹா விகாரை மஹா பிரிவெனாவிற்கு சென்ற கௌரவ பிரதமர், கண்டி அஸ்கிரி மஹா பிரிவெனாவின் பிரிவேனாதிபதி நாரம்பனாவே ஆனந்த தேரரிடமும் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.
அதன் பின்னர் பேராதனை கெடம்பே ராஜோபவனாராமயவிற்கு சென்ற கௌரவ பிரதமர், விகாராதிபதி ஸ்ரீ லங்கா ராமஞ்ஞா மஹா நிகாயவின் சிரேஷ்ட உறுப்பினர் சபிக கெப்பிடியாகொட சிறிவிமல தேரரிடமும் ஆசி பெற்றார்.
கௌரவ பிரதமரின் இவ்வழிபாட்டு நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்களான திலும் அமுனுகம, மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ கமகே, தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெல, கண்டி விஷ்னு ஆலயத்தின் பஸ்னாஹிர நிலமே மஹேன் ரத்வத்தே உள்ளிட்ட பொதுமக்கள் பிரநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.