ஒரு சமூகத்தின் அசைக்கமுடியா ஆணிவேராக இருப்பது அச்சமூகத்தை எதிரொலிக்கும் ஊடகம் தான்! அப்படி தமிழ்ச்சமூகத்தில் எண்ணற்ற பத்திரிகை ஊடகங்கள் மக்களின் மனசாட்சியாக பிரதிபலித்திருக்கிறது.
அந்த வகையில் மேற்குல நாடுகளில், குறிப்பாக தமிழ்மக்கள் வாழும் பகுதிகளிலும் தமிழ் அச்சு ஊடக பத்திரிகைகள் வெளிவருகின்றன. பெரும் வரவேற்பை பெருகின்ற பெற்றுருக்கின்றன.
அப்படி பெரும்பான்மை தமிழ்மக்கள்ககு பரிட்சையமான செய்தி ஏடாக ”கனடா உதயன்” உயர்ந்திருப்பது வெருமைக்குரிய விடயமாகும்.
கனடா உதன் ஏட்டில் உதயமாகும் பல்சுவைசெய்திகள் அனைத்தும் கனடாவில் வாழும் தமிழ்மக்களுக்கான ஊட்டச்சத்தான செய்திகளாகும்.
அரசியல் – சினிமா – இலக்கியம் மாணவர்களுக்கான வழிகாட்டல் என பன்முகத்தைக் காட்டும் ஏடாக கனடா உதயன் நிலைபெற்றிருக்கிறது என்பதை யாரும் மறுக்க இயலாது.
இரு இதழ் 25 ஆண்டுகளை கடந்திருக்கிறது என்றால் அது எத்தனை சிறப்புகளை தாங்கி வந்திருக்கும் என்பதை நம்மால் அறியமுடியும்.
கனடா உதயன் ஏடு கனடாவில் மட்டுமல்ல, அது இணையம் வழியாக உலகெங்கும் ஊடுறுவி தமிழ் மக்களின் மனத்தில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது என்பதை நாம் அறிவோம்!
வெள்ளி விழா காணும் கனடா உதயன் பத்திரிகை இருள் சூழ்ந்த உள்ளத்திற்கு வெள்ளியாக முளைத்து வெளிச்சம் காட்ட தமிழ்க்கலை இலக்கியப் பேரவை சார்பில் நெஞ்சார வாழ்த்துகிறேன்!
இங்ஙனம்
கவிபாஸ்கர்
தலைவர், தமிழ்க்கலை இலக்கியப் பேரவை