மன்னார் நிருபர்
(21-02-2021)
கொழும்பு சிலாபம் தெதியாவ பிரதான சங்கநாயக்கரும், களனி வித்யாலங்கார மஹா பிரிவேனாவின் பிரிவேனாதிபதியும், களனி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான கலாநிதி வெலமிடியாவே குசலதம்ம தேரரின் 84ஆவது ஜனன தின ஆசீர்வாத போதி பூஜை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் பேலியகொட வித்யாலங்கார மஹா பிரிவேனவில் (2021.02.20) பிற்பகல் இடம்பெற்றது.
வித்யாலங்கார மஹா பிரிவெனாவின் பதில் பணிப்பாளர் வெலமிடியாவே ஞானரதன தேரர் இதன்போது அனுசாசனமொன்று நிகழ்த்தினார்.
வணக்கத்திற்குரிய வெலமிடியாவே குசலதம்ம தேரரின் ஜனன தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் புண்ணிய நிகழ்வுகள் முன்னெடுக்கப்படும்.
வணக்கத்திற்குரிய தேரரின் உடல்நிலை சற்று மோசமாக காணப்பட்ட போதிலும் அப்புண்ணிய நிகழ்வை இப்பிறந்த தினத்திலும் அதேபோன்று நடத்துவதற்கு தீர்மானித்தோம்.
நமது நாயக்க தேரர் நாட்டின் கல்வி, மதம் மற்றும் சமூகம் என அனைத்து துறைகளுக்கும் ஒரு சிறந்த சேவையை ஆற்றியுள்ளார். அதற்காக அவர் செல்லாத இடமும் இல்லை. விகாரையும் இல்லை. எமது நாயக்க தேரர் சிறந்த ஆரோக்கியத்துடன் வாழ பிரார்த்திக்கிறேன். விசேடமாக இம்முறை புண்ணிய நிகழ்வில் பங்கேற்க நாம் கௌரவ பிரதமருக்கு அழைப்பு விடுத்தோம்.
அவரது வருகையை நாம் பெரிதும் பாராட்டுகிறோம். கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்நாட்டிற்காக தொடர்ந்தும் சேவையாற்றுவதற்கான சிறந்த ஆரோக்கியமாக வாழ்வதற்கு பிரார்த்திக்கின்றோம் என வணக்கத்திற்குரிய ஞானராதன தேரர் குறிப்பிட்டார்.
அத்துடன் பிரிவேனாதிபதி வெலமிடியாவே குசலதம்ம தேரரை சந்தித்த கௌரவ பிரதமர், வணக்கத்திற்குரிய தேரரின் சாசன பயணம் தொடர அவருக்கு நீண்ட ஆரோக்கியமான வாழ்வு அமைய பிரார்த்தித்தார்.
குறித்த நிகழ்வில் வணக்கத்திற்குரிய அத்தனகல்ல ரஜமஹா விகாராதிபதி பன்னில ஆனந்த தேரர், சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் வேந்தர் கும்புருகமுவே வஜிர தேரர் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
மஹா சங்கத்தினருடன் இராஜாங்க அமைச்சர்களான பிரசன்ன ரணவீர, சிசிர ஜயக்கொடி, இந்திக அநுருத்த உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.