கனடாவின் ரொறொன்டோ பல்கலைக்கழகத்தில், தமிழ் இருக்கை ஒன்றை அமைப்பதற்காக ஒரு கோடி இந்திய ரூபாய்கள் நிதி அன்பளிப்பு வழங்குவதாக, 2021 பெப்ரவரி 22 அன்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
இதற்காகத், தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி கே.பழனிசாமி, தமிழ் மொழி, கலாச்சாரம், தொல்லியல் துறை அமைச்சர் மாண்புமிகு கே.பண்டியராஜன் மற்றும் தமிழ் நாடு அரசில் அங்கம் வகிப்போர் உட்பட, அனைவருக்கும் கனடியத் தமிழர் பேரவை உள உவகையுடன் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்த நிதியுதவியைத் தமிழக அரசிடமிருந்து பெறுவதைச் சாத்தியப்படுத்துவதற்காக உழைத்த அனைவருக்கும், இந்தச் சந்தர்ப்பத்தில் கனடியத் தமிழர் பேரவை நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
கனடியத் தமிழர் பேரவை
416-240-0078 / info@canadiantamilcongress.ca