கனடாவின் நீண்டகாலமாக இயங்கிவரும் ‘ரொரன்ரோ மனித நேயக் குரல்’ அமைப்பின் நிதியுதவியில் யாழ்ப்பாண மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் திட்டம் தொடர்கின்றது.
யாழ்ப்பாணத்தில் இயங்கும் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் மூலமாக மேற்கொள்ளப்ட்ட இந்த உதவித் திட்டத்தின்படி அண்மையில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்திற்கு அருகில் இடம்பெற்ற சிறிய வைபவத்தில் அப்பகுதியில் வாழும் உதவிகள் தேவைப்படும் மாணவ மாணவிகளுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டன.
தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் ஆசிரியருமான திரு பொ. ஐங்கரநேசனின் ஏற்பாட்டில் இந்த வைபவம் இடம்பெற்றது. கனடாவின் நீண்டகாலமாக இயங்கிவரும் ‘ரொரன்ரோ மனித நேயக் குரல்’ அமைப்பின் நிதியுதவியில் தொடர்ந்து இலங்கையின் பல பாகங்களிற்கும் மனித நேய உதவிகள் வழங்கப்படுவதாக அமைப்பின் செயலாளர் திரு மரியராசா மற்றும் பொருளாளர் திரு சங்கர் நல்லதம்பி ஆகியோர் கனடா உதயன் மற்றும் நண்பன் இணையத்தளங்களுக்கு தெரிவித்துள்ளார்கள்.
சுமார் ஆறு இலட்சம் இலங்கை ரூபாய்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த திட்டத்தின் இறுதி நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது தொடர்ந்து கனடாவின் ‘ரொரன்ரோ மனித நேயக் குரல்’ அமைப்பின் உதவித் திட்டங்களுக்கு தங்கள் நிதி அன்பளிப்புக்களை வழங்கவிரும்புவோர்
தொடர்புகொள்ளவும். 416 270 4343, 416 732 1608
இந்த அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் திட்டத்திற்கு கனடாவில் பின்வருவோர் தங்கள் அன்பளிப்புக்களை வழங்கியிருந்தார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு அன்னை (ஒரு ஆன்மீகத் தலைவி), கனடா ஶ்ரீ கைலாசா யோகா அமைப்பு, திரு சங்கர் நல்லதம்பி மற்றும் திரு ஆர். என். லோகேந்திரலிங்கம்