ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கனேடிய வெளியுறவு அமைச்சர்
ஃபெப்ரவரி 24, 2021
இலங்கையில் புரியப்பட்ட குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறப்படுதை இந்தப் மனித உரிமை பேரவை உறுதி செய்யவேண்டியதன் அவசியத்தை, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் அண்மையில் வெளியிட்ட அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. பொறுப்புக்கூறல், மீளிணக்கம், அமைதி ஆகியவற்றுக்கு ஆதரவான நடவடிக்கைகளுக்குக் கனடா தொடர்ந்து ஆதரவளிக்கும். ”
மேற்கண்டவாறு இன்று ஜெனிவாவில் நடைபெறும் மனித உ ரிமைக் பேரவையின் கூட்டத்தில் உரையாற்றிய கனடாவின் வெளியுறவு அமைச்சர் மார்க் காரினியுக் தெரிவித்தார்.அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
“இலங்கையில், மனித உரிமைப் பாதுகாவலர்களும் குடிசார் சமூக அமைப்புக்களும் அச்சுறுத்தப்படுவது, நினைவுகூர்தல் ஒடுக்கப்படுவது, சிறுபான்மையினரின் உடல்கள் பலவந்தமாகத் தகனம் செய்யப்படுவது, சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்து செல்வது ஆகியவற்றை உள்ளடக்கிய மனித உரிமை நிலைமை சீர்குலைந்து செல்வதையிட்டுக் கனடா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.” என்றும் தெரிவித்தார்.