ஈழ மண்ணில் பிறந்து ”கனடா உதயன்” என்னும் தமிழ் இதழை 1996 இல் தொடங்கி நடத்தி 2021 இல் வெள்ளிவிழாக் காணும் அன்புச் சகோதார் தமிழ்த்திரு லோகேந்திரலிங்கம் அவர்களுக்கு எமது உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்…. ஏடுகள் நடத்தி ஏற்றம் பெற்றவர்கள் பலருண்டு. ”மண்ணுரிமை” என்னும் இதழை நடத்திய அனுபவமும் எமக்குண்டு. எழுத்துக்களுக்கு இலக்குகள் இருக்க வேண்டும். இன மீட்சி என்னும் இலக்கோடு ”கனடா உதயன்” பயணிக்கிறது. மக்களை எழச் செய்வதே, எழுச்சி கொள்ளச் செய்வதே எழுத்துக்களாகும்.
இனத்தை எழச்செய்யும் எழுத்துக் களப் பணியை மேற்கொள்ளும் ”கனடா உதயன்” இதழின் உயரிய நோக்கம் ஓங்கட்டும்… வெல்லட்டும்….
மெய்யன்புடன்
தமிழ் இன மீட்சிக்காக….
கு. செந்தில்மள்ளார் தலைவர்,
மள்ளர் மீட்புக் களம்
தமிழர் தாயகம் கட்சி