தமிழக முற்போக்கு மக்கள் கட்சித் தலைவர் சக்திவேல் வாழ்த்துரை
தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் தமிழர்களுடைய கலையும் கலாச்சாரமும் சிந்தனையும் உயர்ந்த வேண்டும் நிலைத்திருக்க வேண்டும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் கனடாவிலிருந்து வெளிவரும் உதயம் வார இதழ் 25 ஆண்டு காலமாக வந்து கொண்டிருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.
உதயம் வார இதழை வெளிக்கொணர்ந்து தொடர்ந்து கனடாவில் வாழ்ந்து வரும் தமிழர்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய இந்த செயல் பாராட்டுக்குரியது. அதுவும் கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர் என்ற பரிமாணங்களைக் கொண்ட திரு. லோலேந்திரலிங்கம் அவர்களின் சிறப்புக்கள், அவர் எடுத்துக்கொண்ட வார இதழ் பணிக்கு பெரும் உதவிகரமாக இருந்திருக்கும் என்பதில் எந்தவிதமான ஐயப்பாடும் இல்லை. அதற்கு மேலாக, அவருடைய சிறப்புகள் இதழியல் பணிக்கு மெருகூட்டப்பட்டு இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். கனடா போன்ற நாடுகளில் வசதி குறைவான காலகட்த்திலிருந்து மிகுந்த இன்னலுக்கிடையில் சிறந்த முறையில் தமிழர் ஒருங்கிணைப்பு பணியை செவ்வனே செய்த இதனுடைய ஆசிரியர் திரு. லோகேந்திரலிங்கம் அவர்களுடைய முயற்சி போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியது. எந்த ஒரு இனம் தன்னுடைய சிந்தனைவாதிகளையும் வரலாற்று ஆசிரியர்களையம் பாதுகாப்பதற்கு உரிய வழிமுறைகளை ஏற்படுத்தி வருகிறதோ அந்த இனம் தான் நிலைத்து இருக்கூடிய ஒரே இனமாக இருக்கும் என்ற அடிப்படையில் திரு. லோகேந்திரலிங்கம் அவர்களின் இதழியல் பணி, தமிழ் தேசிய இனத்தினுடைய உயர்வுக்கும் உன்னதமான நிலையை அடைவதற்கும் இந்த தேசிய இனத்தைச் சார்ந்த மக்களினுடைய பாதுகாப்பிற்கான பணி என்பதை எடுத்துரைத்து இந்த பணி மென்மேலும் சிறக்க வேண்டுமென தமிழக முற்போக்கு மக்கள் கட்சி சார்பாக வாழ்த்துகிறேன்.
க. சக்திவேல்,
தலைவர்
தமிழக முற்போக்கு மக்கள் கட்சி.