திருமதி இலட்சுமி பாலசுப்பிரமணியம்
(மல்லாகம்,உடுப்பிட்டி)
தோற்றம் :- 24-08-1950
மறைவு :- 26-02-2021
மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும் உடுப்பிட்டியை வாழ்விடமாகவும் கொண்டவரான திருமதி இலட்சுமி பாலசுப்பிரமணியம் அவர்கள், 26-02-2021 அன்று வெள்ளிக்கிழமை, உடுப்பிட்டியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்- இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகரட்னம்-வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
உடுப்பிட்டி முன்னாள் பிறப்பு இறப்பு பதிவாளர் கனகரத்தினம் பாலசுப்பிரமணியம் அவர்களின் ஆருயிர்த் துணைவியும், காலஞசென்றவர்களான மயில்வாகனம், கிருஸ்ணபிள்ளை, தம்பித்துரை மற்றும் பூமலர்(அவுஸ்த்திரேலியா) கந்தசாமி ஆகியேரின் அன்புச் சகோதரியும்,
லோகநாதன் (கனடா), பரமேஸ்வரி (கனடா), நேசமணி, ராஜேஸ்வரி, விலாதேவி, காலஞ்சென்ற பவானி, மற்றும் தர்மலிங்கம், செல்வராணி, ஶ்ரீபுஸ்பராணி (கனடா) பாலசுந்தரம் (கனடா), கதிர்காமநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும், சங்கீதா(கனடா), சஞ்சீவன் (கனடா) முகுந்தன், கவாஷ்கரன்(இலண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், பரோபன் (கனடா), சங்கீதா (கனடா) பிரேமியா, ஆர்த்திகா(இலண்டன்) ஆகியோரின் மாமியாரும், இஷான், பிரஷாம்,பிரகீஸ், கவின், கனிஷ்கா, டியானா, விகாஷ், மாயா ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் அனைத்தும் 26-02-2021 அன்று வெள்ளிக்கிழமை உடுப்பிட்டியில் நடைபெற்றன. இத்தகவலை உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் – குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
சங்கீதா (மகள்) 647 770 1202
முகுந்தன் (மகன்) 0779114410