இன்று சனிக்கிழமை முதலாம் நாள் பேச்சாளர்களோடு ஆரம்பமான கனடா உதயன் வெள்ளி விழா ஞாபகார்த்த உலகளாவிய பேச்சுப் போட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை 28ம் திகதியும் தொடரவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.
இன்று சனிக்கிழமை கனடா நேரம் காலை 9.00 மணிக்கு ஆரம்பமான முதல்நாள் பேச்சுப்போட்டிக்கு பேராசிரியர் சங்கரநாராயணன் (தமிழ்நாடு) தலைமை நடுவராக பணியாற்ற அவரோடு இணை நடுவர்களாக, திரு நிமால் விநாயகயமூர்த்தி( கனடா) திரு குயின்றஸ துரைசிங்கம் (கனடா) சட்டத்தரணி இராமகிருஸ்ணன் (தமிழ்நாடு), திரு வீணைமைந்தன் (கனடா) ஆகியோர் பணியாற்றினர்.
முதல் நாள் அழைக்கப்பெற்ற இளம் பேச்சாளர்களில் இலங்கை, தமிழ்நாடு, சுவிற்சலாந்துது, கனடா ஆகிய நாடுகளிலிருந்து 20 போட்டியாளர்கள். பங்குபற்றினர். கனடா உதயன் குழுமத்தைச் சேர்ந்த சங்கர் சிவநாதன், விக்ணேஸ் ஶ்ரீவற்சேவ் ஆகியோர் தொழில்நுட்ப பணிகளைக் கவனித்தனர்.
இன்றைய பேச்சாளர்கள் தாம் பேச எடுத்துக் கொண்ட அரசியல் தலைவர்களாக, திரு வேலுப்பிள்ளை பிரபாகரன், எஸ். ஜே. வி. செல்வநாயகம், எம். ஜி. இராமச்சந்திரன், சீமான், நல்லக்கண்ணு ஐயா மற்றும் ஆகியோர் பற்றி உரையாற்றி பார்வையாளர்களின் பாராட்டுக்களைப் பெற்றுக்கொண்டனர்.
கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் திரு. ஆர். என். லோகேந்திரலிங்கம் நிறுவனர் உரையாற்றினார்.
இன்றைய போட்டியில் போட்டியாளர்களோடு சேர்ந்து சமுர்ரு; 70 பேர் வரையில் இணைய வழி ஊடாக பங்கெடுத்தனர்.
இதே போன்று நாளையும் (ஞாயிற்றுக்கிழமமு 28ம் திகதி) கனடா நேரப்படி காலை 9.00 மணிக்கு பேச்சுப்போட்டி ஆரம்பமாகும்.
சுமார் 20 பேச்சாளர்கள் போட்டியில் கலந்து கொண்டு உரையாற்றிய பின்னர், அரை மணி நேர இடைவேளை விடப்பட்டு அவ்வேளையில் நடுவர்கள் இறுதி முடிவுகள் பற்றி கலந்தாலோசிக்கும் வேளையில் இனிய பாடல்களைப் பாட பைரவி நுண்கலைக் கல்லூரியைச் சேர்ந்த கனடிய பாடக பாடகிகளோடு மலேசியாவின் பாடகர் ரவாங் ராஜாவும் பங்குகொள்கின்றார்.
நாளைய போட்டி நிகழ்ச்சி மற்றும் பாடல் நிகழ்ச்சி தொடர்பாக அறிந்து கொள்ள விரும்புவோர் வற்ஸ்அப் இலக்கம் 1 416 732 1608 என்ற எண்ணோடு தொடர்பு கொள்ளவும்.
இங்கே காணப்படும் படங்கள் இன்றைய தினம் எடுக்கப்பட்டதாகும்…