(மன்னார் நிருபர்)
(01-03-2021)
ஹற்றன் நஸனல் வங்கி மன்னார் கிளையினால் வாடிக்கையாளர்கள் இருவருக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை(1) மதியம் நுன் நிதி குத்தகை அடிப்படையில் இரு சக்கர உழவு இயந்திரங்கள் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஹற்றன் நஸனல் வங்கி மன்னார் கிளையில் வைத்து இன்று (1) திங்கட்கிழமை மதியம் வங்கியின் முகாமையாளர் கந்தையா வடிவளகன்,நுன் நிதி அதிகாரி எம்.ஜெயராஜசிங்கம்,வங்கியின் கடன் பிரிவு அதிகாரி கே.அருன் பிரசாத் ஆகியோர் இணைந்து குறித்த இரண்டு வாடிக்கையாளர்களுக்கும் குறித்த இரு சக்கர உழவு இயந்திரங்களை வழங்கி வைத்தனர்.
3 இலட்சத்து 79 ஆயிரம் ரூபாய் பெறுமதியான குறித்த இரு சக்கர உழவு இயந்திரம் விவசாய மற்றும் சிறு கைத்தொழில் நடவடிக்கைகளை ஊக்கு விக்கும் வகையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
விவசாய கடனை வங்கியூடாக பெற்றுக்கொள்ளும் இரண்டு வாடிக்கையாளர்கள் முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்டு நுன் நிதி குத்தகை அடிப்படையில் இரு சக்கர உழவு இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.