வட்டுக்கோட்டை சுப்பிரமணியம் வித்தியாசாலையில் கல்வி கற்று வரும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மற்றும் சகோதரர்கள் பலர் பாடசாலையில் கல்வி கற்கும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களான இராஐசேகர் ஆர்த்திகன் மற்றும் தெய்வகாந்தன் மதுசாளினி ஆகியோரின் கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்கவும், சகோதரர்களின் கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாக இரு குடும்பங்களுக்கும் தலா ஒரு துவிச்சக்கர வண்டிகளை தந்துதவுமாறு பாடசாலை அதிபரினால் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திடம் கடிதம் மூலம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இன்றைய தினம் ரூபா 45,000 பெறுமதியில் புதிய இரு துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
