கனடா நாட்டின் ரொரன்ரோ மனிய நேயக் குரல் அமைப்பின் அனுசரனையில் கிளிநொச்சி மாவட்டத்தின் அழகாபுரிக் கிராமத்தில் உள்ள அழகாபுரி வித்தியாலயத்தில் புலமைப் பரிசில் பரிசளிப்பு விழா வெகு சிறப்பாக ன்று 25.02.2021 அன்றுஇடம்பெற்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் ஒன்றான அழகாபுரியில் அமைந்திருக்கும் கிளிநொச்சி அழகாபுரி வித்தியாலயத்தில் 106 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். பல்வேறு நெருக்கடிகளின் மத்தியில் இயங்கும் இப் பாடசாலை மாணவர்களுக்கு ரொன்ரோ மனித நேய அமைப்பு கற்றல் உபகரணங்களை வழங்கியுள்ளது.
அத்துடன் நேற்றைய தினம் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் புலமைப் பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு ரொரன்ரோ மனித நேயக்குரல் அமைப்பின் ஏற்பாட்டில் பரிசில்கள் வழங்கப்பட்டன. அத்துடன் பாடசாலையில் கல்வி பயிலும் 106 மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
மிகவும் பின்தங்கிய பிரதேசத்தை சேர்ந்த இப் பாடசாலை மாணவர்கள், நேற்றைய பரிசளிப்பு விழாவை தமது ஆற்றல் மிகுந்த கலை நிகழ்ச்சிகளாலும் வரவேற்பினாலும் வண்ண மயப்படுத்தினர். மாணவர்களின் பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகளும் இதன்போது இடம்பெற்றன.
பாடசாலை அதிபர் திரு சி. இளங்குமரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கரைச்சி கோட்டக் கல்விப் பணிப்பாளர் சுப்பரமணியம் தர்மரத்தினம் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக பற்குணசிங்கம் (ஓய்வு கிராம அலுவலர்) – தனலட்சுமி (ஓய்வுநிலை ஆசிரியர் கலந்து கொண்டனர்.
இதேவேளை கௌரவ விருந்தினர்களாக, கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலய அதிபர் ச.புண்ணியமூர்த்தி, ஆசிரிய ஆலோசகர் பா. ஸ்ரீஸ்குமார், ஆசிரியரும் கவிஞருமான பா. தீபச்செல்வனும் கலந்து கொண்டனர். ரொரன்ரோ மனித நேயக் குரல் அமைப்பின் நிதி அனுசரனையில் நடைபெற்ற நிகழ்வை ஈழத் தமிழ் கலை பண்பாட்டுக் கழகம் ஒருங்கிணைப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது.