இலங்கையின் கொழும்பு மாநகரிலிருந்து வெளிவரும் ‘ஞானம்’ மாத இலக்கிய இதழின் ஆசிரியர் திரு ஞானசேகரன் அவர்களின் 80வது அகவையை முன்னிட்டு மாபெரும் ‘இலக்கியப் போட்டிகள் ஆறு பிரிவுகளாக நடத்தப் பெறுகின்றன.
நாவல்-குறுநாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை,ஈழத்துப் பழந்தமிழ் ஆய்வு, மற்றும் ஈழத்துச் சிற்றிதழ் ஆகிய பிரிவுகளில் சிறந்தவையாக தேர்ந்தெடுக்கப்பெறும் நூல்களுக்கு பணப்பரிசுகள் வழங்கப்பெறவுள்ளன.
மேலதிக விபரங்களுக்கு இங்கு காணப்படும் அறிவித்தலைப் பார்க்கவும்.