காதல் ஒரு அருமையான உணர்வு,
அதைக்காண முடியாது!
ஆனால் உணர முடியும்!
உருவமில்லா காதல் ஒருவரின்
உருவத்தைப்பார்த்து வருவதில்லை,
உள்ளத்தை மட்டுமே பார்க்கிறது,
தோல் சுருங்கி, நடை கூனி,
உருவம் மாறிய பின்னும்
ஒருவர் மீது ஒருவர் கொள்ளும்
காதல், மிகவும் அற்புதமானது,
அழகானது, ஆழமானது!
அதை யாரும் உணர
மறுக்காதீர்கள், அனுபவியுங்கள்.