கோவிட்-19 தொற்றுநோயின் நிதிச் செலவுகளுக்கான தீர்வுக்கென நகராட்சி போக்குவரத்துத் துறைகளுக்கு உதவ ஒன்ராறியோ அரசாங்கம் 150 மில்லியன் டொலர்களை மேலதிக நிதியத்தினூடாக வழங்குகின்றது. இந்த நிதி, ஒன்ராறியோ அரசும் மத்திய அரசும் முன்னர் பாதுகாப்பான மீள்தொடக்க ஒப்பந்தத்தின் மூலம் வாக்களித்த 2 பில்லியனை விடமேலும் கூடுதலான நிதியாக உள்ளதுடன், நகராட்சிகள் முக்கியமான போக்குவரத்து சேவைகளை தொடர்ந்தும் வழங்க உதவியாக அமையும்.
மாகாண நிதியில் மேலதிகமான 150 மில்லியன் டொலர்களுடன் பார்க்கும்போது எதிர்வரும் டிசம்பர் 31, 2021 வரை நகராட்சிகளுக்கு கிடைக்கும் தொகை மொத்தம் 650 மில்லியன் டொலர்கள். அத்துடன், இந்த நிதியம் தேவையின் அடிப்படையில் டிசம்பர் 2022 வரையும் நீட்டிப்புச் செய்யப்படலாம்.
பாதுகாப்பான மீள்தொடக்க ஒப்பந்த நிதியுதவியின் ஒரு பகுதியாக, கோவிட்-19 நோய்த்தொற்றின்போதும் அதற்குப் பின்பும் உள்ளக போக்குவரத்தானது பாதுகாப்புத் தன்மை, நிலைத் தன்மை, குறைவான கட்டணம், ஒருங்கிணைந்த தன்மை போன்றவற்றை உள்ளடக்கியதாக உள்ளதா என்பதை உறுதி செய்வதை ஆராய்வதற்கு உள்ளுராட்சி மன்றங்கள் மாகாண அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும். என்றும் கேட்கப்பட்டுள்ளது.