கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் இழந்த உரிமைகளையும் சலுகைகளையும் குறிப்பாக கிழக்கு மாகாண சபையின் அதிகாரத்தையும் மகிந்தா தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மூலம் பெற்றுத் தருவதாகவும், அதற்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகைளை தமிழ் மக்கள் ஓதுக்க வேண்டும் எனவும் சிறுபான்மையின மக்களின் ஏகோபித்த வாக்குகளால் கிழக்கு மாகாண சபையை கைப்பற்றி இழந்த அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தயாராக இருக்கின்றது. என்றும் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் தெரிவித்தார்.
மேற்படி கட்சியின் அலுவலகத்தில் வைத்து இவ்வாறு தெரிவித்தாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக எமது செய்தியாளர் அனுப்பிவைத்துள்ள செய்திக் குறிப்பில், கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்த முயலுகின்றார் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதற்கு சான்றாக ப. சந்திரகுமார் அங்கு ஆற்றிய உரையின் சில பகுதிகளையும் குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றால் இப்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துள்ள சாணக்கியன் சிறுபான்மையின முஸ்லிம் மக்களின் வாக்குகளினால் முதலமைச்சராவார் என்பது நடைபெறாது.
கிழக்கு மாகாண சபைத்தேர்தல் நடைபெற்றால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சிறுபான்மையின மக்களின் ஏகோபித்த வாக்குகளினால் கிழக்கு மாகாண சபையை கைப்பற்றி இழந்த அபிவிருத்தியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மேற்கொள்வதற்கு தயாராக இருக்கின்றது.தமிழர்களின் பூர்வீக பிரதேசம், பூர்வீக சொத்துக்களை,தமிழர்களின் அடிப்படை உரிமைகளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடாக பாதுகாப்பதுதான் கிழக்கு தமிழர்களுக்கு நிரந்தர இருப்பாக இருக்கும்.
தமிழ்தேசிய தலைமைகள் கிழக்கு தமிழர்களின் தலைமைத்துவ இருப்பை பாதுகாக்காத காரணத்திலும், கிழக்கு பிரதேசத்தை சகோதர இனங்களுக்கு தாரைவார்த்து கொடுத்ததனாலும் கடந்த கிழக்கு மாகாண ஆட்சி தமிழர்களின் இருப்பு கேள்விக் குறியாகி இருந்தது.
இதனை ஆட்சிக்கு வந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கிழக்கு தமிழர்களின் இருப்பை பாதுகாத்தது என தெரிவித்தார்.
தமிழர்களால் உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரங்கள் தமிழர்களின் கைகளில் இருந்து பறிக்கப்பட்டு சிறுபான்மையின மக்களினதும், அரசியல்வாதிகளின் கைகளுக்கு சென்று கொண்டிருக்கையில் ஆட்சிக்கு வந்த எமது பொதுஜன பெரமுன அரசாங்கம் அதிர்ஷ்டவசமாக ஆட்சி அதிகாரங்களை பற்றிக் கொண்டது. இதனால் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டார்கள்.
இவ்வாறு சந்திரகுமார் குறிப்பிட்டுள்ளமை மீண்டும் கிழக்கில் வடக்கு எதிர்ப்பு கோசங்கள் எழுவதற்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான பிரச்சாரங்களை தமிழ் அரசியல்வாதிகளை வைத்தே இனவாத அரசு செய்யும் நிலை ஏற்பட்டு அது, வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழ்த் தேசியத்திற்கு எதிரான வடிவத்தை உருவாக்கும் என்;றும் எமது செய்தியாளர் எச்சரித்துள்ளார்.