தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் முக்கிய தலைவராக இருந்து தலைவர் பிரபாகரன் அவர்களின் பாராட்டுக்களைப் பெற்ற தளபதி கிட்டு இந்து சமுத்திரத்தில் இறுதியாகப் பயணம் மேற்கொண்ட எம்.வி அகத் கப்பலின் கப்டனா பதவி வகித்த வைரமுத்து ஜெயச்சந்திரா அவர்கள் சுகவீனம் காரணமாக அண்மையில் ◌ானது சொந்த இடமான வல்வெட்டித்துறையில் இயற்கை எய்தினார்.
போராளிகள் தங்களின் உயிர்களைவிட பொதுமக்களின் உயிர்கள் பாதுகாக்கபட வேண்டும் என்ற நிலைப்பாடு இந்த சம்பவம் கட்டியம் கூறி நிற்கிறது என்று இந்த சம்பவம் நடைபெற்றபோது பலரால் பேசப்பட்டது.
தளபதி கிட்டு பயணித்த கப்பல் சர்வதேசக் கடலில் இந்தியக் கடற்ப்படையினரால் மடக்கப்பட்ட போது, சரண்டைவதில்லை என்ற கோட்ப்பாட்டில் கப்பலை வெடிக்க வைத்து தளபதி கிட்டு உட்பட போராளிகள் தங்கைள அழித்துக் கொண்டு வீர காவியமானார்கள்!
இதன் போது தாம் தாயகம் நோக்கிப் பயணித்த MV அகத் கப்பல் இனது கப்டனாக பணியாற்றிய வைரமுத்து ஜெயச்சந்திரா பொது மகனை, காத்துக் கொள்ள தளபதி கிட்டு கடலில் குதித்து நீந்து மாறு பணித்தார்.
கப்டன் கடலில் குதித்து நீந்திச் செல்ல கப்பல் வெடித்துச் சிதறியது, கப்டன் இந்தியப் படைகளால் கைது செய்யப்பட்டு பின்னர் சிறைவாசம் அனுபவித்து, விடுதலையாகி வல்வைட்டித்துறையில் வாழ்ந்து வந்த நிலையில், இறுதியில் அண்மையில் இயற்கை எய்தினார்.