யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட போராட்டத்திற்கு நாலா பக்கஙகளிலிருந்தும் ஆதரவு பெருகி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் ஆரம்பமான இந்த போராட்டத்தை பொதுமக்களும் சமூகத் தலைவர்களும் நேரடியாகச் சென்று தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர் இவ்வாறு ஆதரவு தெரிவித்தவர்களுள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்பியும் ஒருவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் “இந்த போராட்டம் வலுப்பெற வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான சி. வி. .விக்னேஸ்வரன் . அவரும் போராட்டம் நடைபெறும் இடத்திற்குச் சென்று உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர் பிரதிநிதிகளையும் சந்த்தித்தார்..
நல்லூரில் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்படும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் 8-வது நாளான இன்றைய தினம் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு அனைத்து தரப்புக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பதப்படுத்த வேண்டும் என்பதனை தான் வலியுறுத்துவதாகவும் அதற்கான அழுத்தத்தினை மக்கள் ஒழுங்கு செய்யும் சிறு சிறு போராட்டங்கள் ஊடாக அழுத்தத்தினை பிரயோகிக்க முடியும் என்று தான் நம்புவதாகவும் இந்தப் போராட்டம் மேலும் மேலும் வலுப்பெற்று சர்வதேச விசாரணையை சர்வதேச அரங்கில் வலியுறுத்த வேண்டும் என்றும் தெரிவித்து அங்கிருந்து விடைபெற்றுச் சென்றார்.