(மன்னார் நிருபர்)
09-03-2021
2021 ஆண்டுக்கான மஹா சிவராத்திரி தினம் வருகின்ற வியாழக்கிழமை (11) சுகாதார நடை முறைகளுக்கு அமைவாக திருக்கேதிஸ்வர ஆலயத்தில் விசேட பூஜைகளுடன் இடம் பெறவுள்ள நிலையில் நீதி மன்ற உத்தரவிற்கு அமைவாக மன்னார் யாழ் பிரதான வீதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (9) தற்காலிக அலங்கார வளைவு அமைக்கப்பட்டுள்ளது.
திருக்கேதிஸ்வர ஆலய நிர்வாக சபையினர் மற்றும் திருத்தொண்டர்கள் இணைந்து அலங்கார வளைவை அமைத்ததுடன் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு நுழைவு பகுதியில் சிரம தான பணிகளையும் முன்னெடுத்துள்ளனர்.
இம் முறை கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட மக்களின் பங்களிப்புடன் கடுமையான சுகாதார நடைமுறைகளை பின் பற்றி திருகேதிஸ்வர சிவராத்திரி நிகழ்வுகள் மற்றும் பூஜை வழிபாடுகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.