அன்னை அம்பிகை அவர்களின் உணவுத்தவிர்பு போராட்டத்திற்கு ஆதரவான நீதிகோரி நடைப்பயணம் – சிங்கள இனவெறி அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துவது உள்ளடங்கிய 4 அம்சக் கோரிக்கையை முன் வைத்து பிரித்தானியாவில் சாகும் வரை உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை தொடரும் அம்மா அம்பிகை செல்வகுமார் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு கனடாத் தமிழ் மக்கள் சார்பாக வரும் ஞாயிற்றுக்கிழமை (14-03-2021) காலை 9.00 மணிக்கு ஆரம்பம். ஒன்றாரியோவில் உள்ள நகரமான Berrie
நகரசபை மண்டபவாயிலில், 70 கோலியர் வீதியில் இருந்து ஆரம்பித்து yong street தெற்கு நோக்கு நடந்து இவ் வழியாக Toronto நகரில் அமைந்துள்ள ஐ.நா சபை காரியாலயம்,200 Bay street இந்திய துணைத் தூதரகம்,365 sherbourn st, Toronto பிரித்தானிய தூதுவராலயம், 778 Bay st Toronto, Ontario பாராளுமன்ற முன்றலில் வியாழக்கிழமை 18-03-2021 அன்று நிறைவு பெறும். இறுதியில் நான்கு இடங்களிலும் மகஜர் கையளிக்கப்படும்.
இவ் நடைபயணத்தில் இரண்டாவது தடைவையாகவும் பங்கு கொள்வதற்கு திரு.அருட் சகோதரன், டேவிட்தோமஸ், திரு.வைசீகமணி யோகேந்திரன்,மகாஜெயம் மகாலிங்கம், விஜதரன் வரதராஜா ஆகியோர் தலைமைதாங்கும் முக்கியஸ்தர்களாக செயலாற்ற தம்மை அர்ப்பணித்துள்ளனர். இம் நால்வரும் Brampton to Ottawa நடைபயணத்தின் செயல் உணர்வாளர்கள்.
எம் இனிய கனடா வாழ் தமிழினமே! அன்னை அம்பிகை செல்வகுமாரின் கோரிக்கைக்கு ஆதரவு கொடுக்க வேண்டியது எமது தார்மீகக் கடமையாகும். அனைவரும் அணி திரண்டு நடை பயணத்தை வெற்றியாக்கி எமது உரிமைகளை வென்றெடுக்க வாருங்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை Berrie இல் அணி திரள்வோம். நடைப்பயணத்தில் பங்கு கொள்வோம் மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் ஒருங்கினைப்பாளர்கள்.
கண்ணன் – 647-808-7766,
டேவிட்தோமஸ் – 647-852-3141,
யோகன் – 613-854-3336,
மகாஜெயம்- 642-262-5587,
விஜி – 647-783-3466.