தன்னைச் சந்திக்கவென, எந்தவொரு முன்னறிவுப்புமின்றி வாக்குமூலம் பெற தனது இருப்பிடத்திற்கு சென்ற இலங்கை பொலசாரை திருப்பியனுப்பியுள்ளார் பொத்துவில்-பொலிகண்டி புகழ் வேலன் சுவாமிகள். அவர்கள் சில வாராங்களுக்கு முன்னர் நன்கு திட்டமிட்ட வண்ணம், வடக்கு கிழக்கு நீதிமன்றங்களின் தடையுத்தரவை மீறியபடி வேலன் சுவாமிகள் போன்றவர்களின் தலைமையில் மக்கள் பேரெழுச்சியுடன் பொத்துவில் தொ
மேற்படி போராட்டம் இடம்பெற்றது தொடர்பில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் , மக்கள் சமூகப் பிரதிநிதிகள் என பலரிடம் இலங்கை;ப பொலிசார் ர் வாக்கு மூலங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில்; நேற்று புதன்கிழமை யாழ்பபாணம் நல்லூரிலுள்ள வேலன் சுவாமிகளிடம் வாக்கு மூலம் பெற இலங்கை பொலிசார் திடீரென சென்றனர்.
அவர்களை திடீரெனக் கண்ட வேலன் சுவாமிகள்ம் போதிய முன்னறிவிப்பின்மை மற்றும் தனது சட்டத்தரணிகளது ஆலோசனையினை பெறவேண்டிய தேவை ஆகிய காரணங்கள் நிமித்தம் வாக்குமூலமளிக்க முடியாது என தெரிவித்து அவர்களை திருப்பி அனுப்பியுள்ளார் இந்தச் சம்பவம் இலங்கை எங்கும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்