வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிவித்தல்!
மன்னார் நிருபர்
(11-3-2021)
இன்று வெள்ளிக்கிழமை வருடாந்த சிவராத்திரி நாள் வழிபாடுகள் நடைபெறவுள்ளது.
ஆனால் கடந்த வாரத்திலிருந்து யாழ் மாவட்டத்தில் கொவிட் – 19 பரவல் தீவிரமடைந்து வருகின்றது.
அதனால் பக்தர்கள் மற்றும் பொது மக்களை அவதானமாக நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
கோவில்களில் நடைபெறவுள்ள சிவராத்திரி வழிபாடுகளில் ஆகக் கூடியதாக 50 பேரை மட்டும் அனுமதிக்குமாறும் ஏனையோர் தத்தம் வீடுகளில் தங்கி நின்று எங்கும் நிறைந்துள்ள இறைவனை மனதிலிருத்தி வழிபடுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் சிவராத்திரி நாளுடன் இணைந்து கோவில்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலாசார நிகழ்வுகளை இரத்து செய்து தனியே சமயாசார கிரியை நிகழ்வுகளை மட்டும் நடாத்துமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
அத்துடன் மேற்கூறிய கட்டுப்பாட்டுகளுடன் நடைபெறவுள்ள இவ்வருட சிவராத்திரி வழிபாடுகளில் கொவிட் – 19 தொற்றுத் தடுப்புக்கான சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறும் அவற்றைக் கண்காணிக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
எமது இவ்வேண்டுகோளுக்கு இந்து மதகுருமார்கள், இந்து மதத் தலைவர்கள், கோவில் அறங்காவலர் சபையினர், பக்தர்கள் மற்றும் பொது மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன்
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்
வடமாகாணம்