இங்கிலாந்தில் அன்னை அம்பிகை அவர்களின் உணவுத்தவிர்பு போராட்டத்திற்கு ஆதரவான நீதிகோரி நடைப்பயணம் – சிங்கள இனவெறி அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துவது உள்ளடங்கிய 4 அம்சக் கோரிக்கையை முன் வைத்து பிரித்தானியாவில் சாகும் வரை உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை தொடரும் அம்மா அம்பிகை செல்வகுமார் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு கனடாத் தமிழ் மக்கள் சார்பாக வரும் ஞாயிற்றுக்கிழமை (14-03-2021) காலை 9.00 மணிக்கு ஆரம்பம்.
ஒன்றாரியோவில் உள்ள நகரமான Berrie நகரசபை மண்டபவாயிலில், 70 கோலியர் வீதியில் இருந்து ஆரம்பித்து yong street தெற்கு நோக்கு நடந்து இவ் வழியாக Toronto நகரில் அமைந்துள்ள ஐ.நா சபை காரியாலயம்,200 Bay street இந்திய துணைத் தூதரகம்,365 sherbourn st, Toronto பிரித்தானிய தூதுவராலயம், 778 Bay st Toronto, Ontario பாராளுமன்ற முன்றலில் வியாழக்கிழமை 18-03-2021 அன்று நிறைவு பெறும். இறுதியில் நான்கு இடங்களிலும் மகஜர் கையளிக்கப்படும்.