பேரூந்தின் சாரதி மற்றும் குறித்த புகையிரத கடவையின் பாதுகாப்பு ஊழியர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு.
மன்னார் நிருபர்
(17-03-2021)
தலைமன்னார் பியர் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை(17) மதியம் தனியார் பேரூந்தும் புகையிரதம் மேதி எற்பட்ட விபத்தில் உயிரிழந்த தலைமன்னார் பியர் பகுதியை சேர்ந்த பாலசந்திரன் தருண் (வயது-14) என்ற மாணவனின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில் குறித்த மாணவனின் இல்லத்தில் புதன் கிழமை அஞ்சலி இடம் பெற்றது.
குறித்த மாணவனின் உடலுக்கு பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
குறிப்பாக சிறுவனின் உடலுக்கு தலைமன்னார் பகுதி மக்கள் தலைமன்னார் பாடசாலை மாணவர்கள் அரசியல் பிரமுகர்கள் அரச ஊழியர்கள் என பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
சிறுவனின் உடல் பொது மக்களின் அஞ்சலியின் பின்னர் மாலை 3 மணியளவில் தலைமன்னார் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படது.
இதே வேளை விபத்திற்கு உள்ளான தனியார் பேரூந்தின் சாரதி மற்றும் குறித்த புகையிரத கடவையின் பாதுகாப்பு ஊழியர் ஆகியோர் செவ்வாய்க்கிழமை (17) மாலை தலைமன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய போது குறித்த இருவரையும் எதிர் வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.