இதுவரையிலும் பல இலட்சம் ரூபாய்களை பல்வேறு உதவித் திட்டங்களுக்கு வழங்கியவர் அவரே என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஶ்ரீதரன் புகழாரம்
எமது தாயகத்தில் போரின் பாதிப்புக்களினாலும் மற்றும் வெள்ள அனர்த்தம், உணவுப் பஞ்சம் போன்ற இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்டு அல்லலுறும் மக்களுக்கு மனித நேயத்துடன் தனி மனிதராக உதவி வருபவர் கனடா மொன்றியால் (FRUITS HABY) புரூட்ஸ் ஹபி நிறுவத்தின் உரிமையாளர் ஶ்ரீ அண்ணர் சண்முகலிங்கம்
கடந்த பல வருடங்களாக தொடர்ச்சியாக எமது மண்ணில் பல்வேறு பகுதிகளிலும் உதவிகள் தேவைப்படுவோருக்கு இதுவரையிலும் பல இலட்சம் ரூபாய்களை பல்வேறு உதவித் திட்டங்களுக்கு வழங்கியவர் அவரே. குறிப்பாக அண்மையில் எமது தாயகத்தில் முன்னாள் போராளிகள் 12 பேருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபாய்கள் வீதம் 12 இலட்சம் ரூபாய்களை வழங்கி அந்தப் போராளிகளுக்கு மறுவாழ்வு அளித்தவரும் கனடா மொன்றியால் FRUITS HABY புரூட்ஸ் ஹபி நிறுவத்தின் உரிமையாளர் ஶ்ரீ அண்ணர் சண்முகலிங்கம் என்னும் மனித நேயக் குணாம்சம் கொண்ட வர்த்தக பெருந்தகை”
.இவ்வாறு கனடா மொன்றியால் ( FRUITS HABY) புரூட்ஸ் ஹபி நிறுவத்தின் உரிமையாளர் ஶ்ரீ அண்ணர் சண்முகலிங்கம் அவர்களைப் பாராட்டி உரையாற்றினார் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஶ்ரீதரன்.
கனடா மொன்றியால் (FRUITS HABY) புரூட்ஸ் ஹபி நிறுவத்தின் உரிமையாளர் ஶ்ரீ அண்ணர் சண்முகலிங்கம் அவர்களின் நிதி உதவியில் பாதிக்கப்பட்ட இரணைதீவு மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் கையளிக்கும் வைபவத்தில் பிரதம விருந்தினர் உரையாறறிய போதே பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஶ்ரீதரன் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“மொன்றியாலின் ஶ்ரீ அண்ணர் என்று அன்பாக அழைக்கப்பெறும் சின்னத்துரை சண்முகலிங்கம் அவர்களின் மருமகனும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ஆசிரியருமான ஹரி சங்கர் அவர்கள் இணைப்பாளராகப் பணியாற்றுவதன் மூலம் இந்த மனித நேயப் பணிகள் எமது தாயக மண்ணில் சரியான மக்களைச் சென்றடைகின்றன” என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஶ்ரீதரன் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்
“உலகெங்கும் வாழும் அனைத்து தமிழ் மக்களும் நன்கு அறிந்துள்ள இரணைதீவில் இடம்பெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள், அதனால் பாதிக்கப்பட்ட அங்கு வாழும் மக்கள், அவர்களின் கடற் தொழில் பாதிக்கப்பட்ட அநியாங்கள்மற்றும் அந்த உதவிகள் அவசரமாக தேவைப்பட்ட விடயம் ஆகிவற்றை கேள்வியுற்ற ஶ்ரீ சின்னத்துரை சண்முகலிங்கம் அவர்கள் உடனடியாக செயலில் இறங்கி பெருந்தொகைப் பணத்தை இரணை தீவு மக்களின் துயர் துடைக்க அனுப்பி வைத்தார். இந்த மனித நேயப் பணிகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட மக்களின் சார்பாக உரியவர்களோடு தொடர்பு கொண்ட இரணைதீவு பங்குத் தந்தை அவர்களும் தனது பணியை நேர்த்தியாகச் செய்துள்ளார். அவருக்கும் எனது பாராட்டைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
கனடா மொன்றியால் நகரில் ஒரு வெற்றிகரமான வர்த்தகப் பிரமுகராகத் திகழும் சின்னத்துரை சண்முகலிங்கம் அவர்கள் பல வருடங்களாக இவ்வாறான மனித நேயப் பணிகளை ஆற்றிவருகின்றார். அவர் மிகவும் அமைதியாகவும் அடக்கமாகவும் இருந்தே இந்தப் நற்பணியை ஆற்றி வருகின்றார்”
.இவ்வாறு புகழாரம் சூட்டினார் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஶ்ரீதரன் அவர்கள்.
இங்கே காணப்படும் படங்கள் இரணைதீவில் உள்ள தேவாலயத்திற்கு அருகில் எடுக்கப்பட்டவையாகும்.
FRUITS HABY