Ontario Premier Doug Ford responded to the U.S. reports on COVID-19 vaccine doses to Canada.
“கடவுள் அமெரிக்காவை ஆசீர்வதிக்கட்டும். அவர்கள் எம்மை மீட்பதற்கு வருகின்றார்கள்”
கனடாவிற்கு தடுப்பூசிகள் வழங்க சம்மதித்தது தொடர்பாக ஒன்றாரியோ முதல்வர் டக் போர்ட் மகிழ்ச்சி தெரிவிப்பு
(ஸ்காபுறோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்)
“கடவுள் எமது அயல்நாடான அமெரிக்காவை ஆசீர்வதிக்கட்டும். அவர்கள் எம்மை மீட்பதற்கு வருகின்றார்கள்” இவ்வாறு மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார் ஒன்றாரியோ மாகாணத்தின் முதல்வர் டக் போர்ட் அவர்கள்.
நேற்று காலை குயின்பார்க் எனப்படும் ஒன்றாரியோ பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது அவர் இவ்வாறு பாராட்டுத் தெரிவித்தார். நேற்று முன்தினம் வெள்ளிமாளிகையின் ஊடகப் பொறுப்பாளர் தனது வழமையான ஊடகச் சந்திப்பின் போது தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாகவே கனடாவிற்கு தடுப்பூசிகள் வழங்க சம்மதித்தது தொடர்பாக ஒன்றாரியோ முதல்வர் டக் போர்ட் அவர்கள் மிகுந்த பரவசத்துடன் இவ்வாறு தெரிவித்தார்.
மேற்படி விடயம் தொடர்பாக ஒன்றாரியோ முதல்வர் மேலும் தெரிவிக்கையில்
” நான் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் ஜனாதிபதியாக பதவி வகித்த கால்ப்பகுதியிலும் கோவிட்-19 தடுப்பூசிகளை கனடிய மக்களுக்கும் ஒன்றாரியோவின் மக்களுக்கும் உடனடியாக வழங்கும் படி நேரடியாகக் கேட்டிருந்தேன். அவர் தருவதற்கு சம்மதிக்கவில்லை. பின்னர் புதிய ஜனாதிபதி ஜோ பைடன் அவர்களிடமும் வேண்கோள்விடுத்தேன். உண்மையாகவே அவர்கள் இவ்வாறு நான் வேண்டியதை விரும்பியிருக்க மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும்.
தற்போது அமெரிக்கா எங்கள் நாட்டுக்கு 2 மில்லியன் கோவிட்-19 தடுப்பூசிகள் வழங்குவதற்கு சம்மதித்துள்ளதை வெள்ளை மாளிகை அறிக்கைகளில் வாசித்தேன். இதனால் ஒன்றாரியோவின் முதல்வர் என்ற வகையில் நான் பரவசப்படுகின்றேன்.
இவ்வாறு டக் போர்ட் அவர்கள் தெரிவித்தார்கள்
“