நன்றி எமது கனடிய அரசுக்கு. கொரணா வியாதியில் தவிக்கும் எமக்கு தண்ணி மட்டுமல்ல, வடை, பாயாசத்துடன் சாப்பாடு தந்தது போன்று பல விதமான கொடுப்பனவுகளை அளித்து வருகிறது. மிக்க நன்றி.
இத்தகைய அரச கொடுப்பனவுகளின் பெரும்பகுதி, சமுதாயத்தின் அடிமட்டத்தில் வாழ்பவர்கள். அடிப்படை ஊதியம் பெறுபவர், சிறுதொழிலதிபர்கள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் என கனடியர்களுக்கு பெருமளவு மடைதிறந்து பாச்சப்படுகிறது. இக் கொடுப்பனவுகள் எதிர்வரும் யூன் மாதம் வரை நீடிக்கபட்டிருக்கிறது என்ற செய்தியும் மகிழ்ச்சிக்குரியதே.
இவ்வாறானவேளை, நிதிபடைத்தவர்கட்கு உயர்தொழில்துறை நிறுவனங்களுக்கு இந்த இடக்குமுடக்கென. பொருளாதார நெருக்கடிகள் இல்லை. அவர்களின் சில நிறுவனங்களுக்கு மேலதிகவருவாய்கூட இக் கொரணா வியாதி உச்சத்தில் உள்ள இவ்வேளையில் கிடைக்கிறது.
இவ்வாறாக இருக்கும் நிலையில் கடன் பளுவாலும் வருவாய் இழப்பாலும் வேலை நீக்கத்தாலும் . கணிசமான எம்மவர்கள் தவியாய்த் தவிக்கின்றார்கள். கடன் அட்டைகளை தாராளமாக பாவித்த அதற்கான வட்டியைக் கட்டியே மேலும் அது படுகுழிக்குள் தள்ளிவிட்டது. மாதக்கணக்காக, வருடக்கணக்காக கட்டி வந்த பின்னரும் கடன் கரையாமல் இருப்பது கண்டு கலங்குகின்றார்கள். அமெரிக்காவில் பல கிரடிட்காட் கம்பனிகள் வட்டிவீதத்தை குறிப்பிட்ட காலத்திற்கு பெருமளவு குறைந்துள்ளன. கனடாவில் இவ்வாறான நிதி நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டால் ஏதோ , காரணங்கள் கூறி மழுப்பிவிடுகின்றார்கள்.
இந்த நிலை மற்றும் கணிசமானவர்களின் கதவுகளை வெகுவிரைவில் தட்ட காத்திருக்கின்றது. அரச கொடுப்பனவுகள் வகுகின்ற யூன் மாதமோ அல்லது சற்று நீடிக்கப்பட்டாலும் அரச பானையில் பாயாசம், சமையல் கட்டில் அறுசுவை உணவு வற்றிவிடப்போகிறது. இதனைவிட அரசு வழங்கிய கடன் சுமார் அறுபதினாயிரத்தை அடுத்த ஆண்டு டிசம்பர் 31ம் திகதிக்குள் எண்பது வீதமளவில் கட்டியாக வேண்டும். அதற்குள் கட்டி கடனை அடைக்கத்தவறினால் கனேடிய வருமான வரி இலாகா வட்டியும். குட்டியுமாக அறவிடகூடிய சாத்தியகூறுகள் உண்டு. முடியமானால் உங்கள் சொத்துகளில். வீடுகளின் மேல்கூட அந்த கடனை ஏற்றியும் விடலாம்.
இந்நிலையில் உங்கள் துக்கத்தை துடைப்பேன். குறட்டை விட்டோ அல்லது விடாமலே நன்றாக தூங்க வழிவகைகள் உண்டு. கடன் பளுவால் மனைவி, பிள்ளைகள் மீது எரிந்து விழும் நிலையை மாற்ற அன்பாக, பண்பாக பக்குவமாக பாசத்துடன் வாழ நான் வழிசமைத்து தருவேன். உங்களுக்கு கனடிய சட்டதிட்டங்களுக்கு அமைய பயமின்றி கடன் சுமையை மலைபோல் களைந்து தரமுடியும். இந்த சேவைபற்றி பயப்படதேவையில்லை. பின்விளைவுகளும் பாரதூரமானவையல்ல.
எப்படியானவர்கள் என்னை அணுகமுடியும்?. உதாரணமாக கடன் எடுத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் கற்று பின்னர் தகுந்தவேலை பெற்று போதிய வருமானம் பெறமுடியாதவர்கள் அந்த கடனை ஏழு வருடங்களுக்குள் அடைக்கமுடியாது போனால். நீங்கள் வங்குரோத் பதிவு செய்து பல பின் விளைவுகளை சந்திக்கத் தேவையில்லை. கனேடிய அரசிற்கு வருமானவரி இலாகாவை பொறுத்தமட்டில் வருடவட்டியல்ல. மாதவட்டியல்ல தினமும் வட்டியை பதிவு செய்கிறார்கள். இந்த வருமானவரி கட்டவேண்டிய தொகை பன்றி குட்டி போடுவதபோல ஏற்றி கொண்டே போகின்றது. ஆனால் நீங்களும் இலகுவில் பெருமளவு கடனை அடைக்க முடியும்.
கடன் அட்டைகள் எம்மில் பலரிடம் காணப்படுகிறது. நாம் பொதுவாக காசு கொடுத்து பொருட்கள் வாங்குவதாயின் பல தடைவைகள் யோசிப்போம். கிரடிட்காட்டுடன் கொள்வனவு செய்வதாயின் “ஊரா வீட்டு நெய்யே பெண்டாட்டி கையே” என தாராளமாக வாங்குகின்றோம். சிலவேளை வேலைப்பளு காரணமாக மாதாந்தம் செலுத்த வேண்டிய தொகையை தாமதமாக செலுத்த வேண்டிய கால அவகாசத்துக்குள் செலுத்தாவிட்டால், 19.9வீத வட்டி வீதத்தை 29.9 வீதம் வரைக்கும் கூட உயர்த்தி விடலாம். அவ்வாறு கஸ்டப்படும் நீங்கள் அட்டமத்தி சனியின் பார்வையிலிருந்து வெள்ளி திசையின் பார்வைக்கு வந்த மாதிரி மகிழ்வாக இருக்கலாம்.
மற்றும் கார் கடன் கட்டணத்தை கட்டிக்கொள்ள முடியவில்லை மற்றும் பல கடைகளில் பொருட்கள் கடனுக்கு வாங்கி பின்னர் உரிய காலத்தில் செலுத்த முடியவில்லை. கவலையை விடுங்கள். கடனை கைவிடுங்கள். கடனை கரைத்துவிடும் மாத்திரை ஒன்று இருக்கின்றது. இது சத்திரசிகிச்சை செய்யாமல் நோயை குணப்படுத்தும் மூலிகை. இதனை பாவிப்பதால் வயிற்று கோளாறு அல்லது சுவாசப்பிரச்சனை எதுவும் வராது நோயை குணப்படுத்தும் மருந்து தான் இது.
அதுதான் கொன்சுயுமர் புறப்போசல் என்னும் விடயம் (Consumer Proposal). இதன்படி நீங்கள் பதிவு செய்தால், உங்கள் கடன்பளுவிலிருந்து சுமார் 80 வீதமளவில் கட்டாமல் தப்பிக்கொள்ளலாம். உதாரணமாக உங்களிடம் ஒட்டுமொத்த பலவிதமான கடன்கள். வங்கி கடன், கிரடிட்காட் கடன், கடைகளில் பெறப்பட்ட பொருள்களுக்கு செலுத்த வேண்டியகடன், கல்விக்கான மாணவர் கடன். வுhகனம் வாங்கிய கடன் என இவற்றில் ஒன்று அல்லது அதில் சில அல்லது பலவாக இருக்கலாம். அவையனைத்தையும் சேர்த்து பதிவாக்கலாம். உங்கள் கடன் சுமார் ஒரு லட்சம் டொலரென வைத்து கொள்வோம். அதில் நீங்கள் எண்பதாயிரத்தை கட்ட தேவையில்லை. சுமார் இருபதாயிரத்தை மட்டமே செலுத்த வேண்டும். அதனையும் கூட உடனடியாக, ஒரேயடியாக கட்டதேவையில்லை. அதனை மாதாமாதம். கிழமைக்கு கிழமை ஐந்து வருடங்களுக்குள் செலுத்தினால் போதும். அதுவும் வட்டியின்றி.
இவ்வாறாக செலுத்த வேண்டிய தொகையை செலுத்தும்போது உங்களுக்கு கிரடிட் காட் கம்பனிகள், வங்கி நிறுவனங்கள் மற்றும் கடன் தந்த நிறுவனங்கள் கடிதம் போட்டோ அல்லது தொலைபேசியில் அழைத்தோ கரைச்சல் தருவது நிறுத்தப்பட்டுவிடும். நிம்மதியாக நீங்களும் தொலைபேசி அழைக்கும்பொழுது பதிலளிக்கலாம். கடன்காரன் அறம் புறமாக பேசி அலுப்பு தருவதும் நிறுத்தப்பட்டுவிடும். சட்டநடவடிக்கைகளும் நிறுத்தப்படும்.
இவ்வாறு கொன்சியுமர் புறப்போசல் பதிவு செய்வதினால் சில பின் விளைவுகளும் வரத்தான் செய்யும். அதனை வங்குரோத் பதிவு செய்வதுடன் ஒப்பிடும்போது வங்குரோத்து ஓர் பாரிய அறுவைசிகிச்சை. இங்கு எதுவும் செய்யாமல் கொன்சியுமர் புறப்போசல் என்பது மெல்லிய மாத்திரை விழுங்கிய மாதிரியாகும். இவ்வாறு பதிவான பின்னர் சிறிய காலம் கடன் அட்டைகள் பெறுவது போன்றவற்றை தள்ளிப்போட வேண்டிவரும். அடுத்து முக்கியமாக குடிவரவு விடயத்தில் உறவினரை ஸ்கான்சர் செய்வதில் எந்தவிதமான பாரதூரமான தடங்கல் எதுவும் ஏற்படபோவதாக தெரிவதில்லை. இந்த செயல்பாட்டின் சிறிது காலத்தின் அரச கொடுப்பனவுகள் தொடாந்து கிட்டக் கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் கிரடிட் ரேற்றிங் சிறிதளவு இறங்கும். அவ்வளவுதான்.
இவ்வாறான கொன்சியுமர் புறப்போசல் செய்து பெருமளவு கடனை, இலகுவாகவும், வேகமாகவும், நேர்த்தியாகவும் அடைந்து வெற்றிகண்டு கொள்ள இத்துறையில் நீண்டகால அனுபவம்மிக்க, இன்றைய அரச சட்ட திட்டம் தொடர்பான மாற்றங்களை நன்கு அறிந்த, சமூகநலனும் அக்கறையும் கொண்ட ஒருவரை அணுகிக்ககொள்வது புத்திசாலித்தனமானது.
எனவே, நீங்கள் சுரேன் சொர்ணலிங்கம் ஆகிய என்னை அணுகுங்கள். முதலில் இதுபற்றி அலோசனை வேண்டுமென்றால் இலவச ஆலோசனை தொலைபேசி, மின்னஞ்சல். சமூகவலையம் அல்லது நேரடியாக சந்தித்து பெற்றுக்கொள்ளுங்கள். நாளைய வாழ்வு கரடுமுரடாக இருக்கக்கூடாது. இன்றைய வாழ்வைவிட இனிதாக இருக்க வேண்டும் என்பதே எனது சேவையின் அடித்தளமாகும்.