தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன்
(மன்னார் நிருபர்)
(25-03-2021)
சர்வதேச அரங்கில் இராஜதந்திர ரீதியாக இலங்கைக்கு ஒரு தோழ்வியை ஏற்படுத்தியுள்ளதாகவே இந்த பிரேரணை இருக்கின்றதே தவிர பாதீக்கப்பட்ட தரப்பிற்கு ஒரு நியாயம் கிடைக்கக்கூடிய வகையில் அல்லது பாதீக்கப்பட்ட தரப்பு எதிர் பார்க்கக்கூடிய அளவில் நீதியின் தன்மை வெளிப்படுத்தப்பட்டதாக இல்லை என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார்.
-மன்னாரில் வியாழக்கிழமை காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
ஜெனிவா கூட்டத்தொடர் செவ்வாய்க்கிழமை நிறை வடைந்துள்ளது. 46/1 தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டிய வழிமை தொடர்பாக கடந்த ஜனவரி மாதம் பிரதான மூன்று தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களை ஒன்றிணைத்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தில் எவ்வாறான தீர்மானம் கொண்டு வரப்ட வேண்டும் என பாதீக்கப்பட்ட தரப்பினர் சார்பாக தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில், இணை அனுசரனை நாடுகளுக்கும், பிரதானமாக பிரேரணையை கொண்டு வந்த நாடுகளுக்கும் முன் யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
ஆனால் எங்களுடைய எதிர்ப்பார்ப்புக்கள் முழுமையாக பூர்த்தி செய்யப் பட்டிருக்கக்கூடிய நிலமையில் முடிவுறுத்தப்பட்ட பிரேரணை இல்லை.
எனினும் இலங்கையை சர்வதேச அரங்கில் இராஜதந்திர ரீதியாக இலங்கைக்கு ஒரு தோல்வியை ஏற்படுத்தியதாகத்தான் இந்த பிரேரணை இருக்கின்றதோ தவிர பாதீக்கப்பட்ட தரப்பிற்கு ஒரு நியாயம் கிடைக்கக்கூடிய வகையிலோ அல்லது பாதீக்கப்பட்ட தரப்பு எதிர் பார்க்கக்கூடிய அளவில் நீதியின் தன்மை வெளிப்படுத்தப்பட்டதாகவும் இல்லை.
பூகோள அரசியலின் பிரகாரம் இரு துருவ அரசியல் போக்கின் அடிப்படையில் அமெரிக்கா சார்பு, சீன சார்பு என்கின்ற இரண்டு சார்பு நிலைகளுக்குள் இந்த பிரேரணை நிறை வேற்றப்பட்டுள்ளது.
குறைந்த பட்சம் 30/1 தீர்மானத்தினுடைய அளவு கூட 46/1 தீர்மானத்தின் உள்ளடக்கம் காணப்படவில்லை.
குறிப்பாக சாட்சியங்களை பதிவு செய்தலும்,பாதுகாத்தலும் என்கின்ற பொறிமுறையை தவிர ஏனைய பொறிமுறைகள் இந்த தீர்மானத்தின் வரைபில் இல்லை.
குறித்த திருத்தத்தைக் கூட எவ்வாறு முன்னெடுக்கப்போகின்றார்கள்?அதற்கான பொறிமுறைகள் என்ன? அதற்கு எவ்வாறு பெயரிடப் போகின்றார்கள் என எதிர் பார்க்கப்படுகின்றது.
ஆனால் அவ்வாறு இருக்குமா என தெரியவில்லை. இந்த விடையங்கள் வெளி வரவில்லை.
இருந்தாலும் ஹங்காரு நீதிமன்ற செயல் போல் குற்றவாளியே குற்றவாளியை விசாரிக்கின்ற நிலை போல் குறித்த தீர்மானத்தின் நிலைப்பாடு காணப்படுகின்றது.
அத்தீர்மானம் பாதீக்கப்பட்ட தரப்பினருக்கு எவ்வாறான நியாயத்தை கற்பிக்கப் போகின்றது என தெரியவில்லை.கடந்த காலத்தில் தரசுமன் அறிக்கையின் செயல்பாடுகளும் கூட சர்வதேச அளவில் முன்னெடுக்கப்பட்ட விசாரனையாக இருந்தும் கூட அதுவும் காணாமல் போய் விட்டது.
இதன் பிரகாரம் உள் நாட்டில் உறுவாக்கப்பட்ட எல்.எல்.ஆர்.சி ,பரன கம ஆணைக்குழு ஆகிய இரண்டு அறிக்கைகளின் முடிவுகளும் இந்த நாட்டிலே நடை முறைப் படுத்தப்படவில்லை.
ஜெனிவா தீர்மானத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தினுடைய செயல்பாடு மிக மோசமான விளைவையே ஏற்படுத்தியுள்ளது.
மொத்தத்தில் நல்லிணக்கம் என்கின்ற நிலைமாறு கால நீதி பொறிமுறை கூட இலங்கையில் தோற்று விட்ட இந்த சூழ் நிலையில் கடந்த 11 ஆண்டுகளில் பாதீக்கப்பட்ட தரப்பினருக்கு எவ்வாறான நியாயத்தையும் கற்பிக்கவில்லை.
கடந்த மூன்று ஆண்டுகளாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவகளினது போராட்டம் இடம் பெற்று வருகின்ற சூழ் நிலையிலும், அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்கின்ற சூழ் நிலையிலும், யுத்தத்தில் கொல்லப்பட்ட அல்லது காணாமல் ஆக்கப்பட்ட ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 679 நபர்களின் நிலை என்ன என்கின்ற கேள்விக்கு சர்வதேச சமூகத்தினால் அல்லது மனித உரிமைகள் ரீதியாக முன்னெடுக்கின்ற நாடுகள் பாதீக்கப்பட்ட தரப்பிற்கு ஒரு நீயாய பூர்வ விடையத்தை கற்பிக்கக் கூடியதாக இல்லை.
தீர்மானத்தை நாங்கள் மகிழ்வுடன் வரவேற்கக்கூடிய நிலையில் இல்லை. எங்களினுடைய எதிர்பார்பில் பல அம்சங்கள் இல்லை.
சர்வதேச அரங்கில் இலங்கையை ஒரு குற்றவாளிக் கூண்டில் நிறுத்தக்கூடிய நிலைப்பாட்டில் சர்வதேச ரீதியாக இலங்கையின் போர்க்குற்ற விவகாரம் ஒரு விவாத பொருளாக இருக்கின்றது என்பதில் மட்டுமே திருப்தி கொள்ள முடியும்.
ஏனைய விடையங்களில் திருப்தி கொள்ளக் கூடிய நிலை இல்லை.இரு நாடுகள் சம்மந்தப்பட்ட விடையம்.
அந்த நாடுகள் தங்களின் நலனின் அடிப்படையில் இவ்வாறான தீர்வுகளை அவர்கள் முன்னெடுப்பதினால் தான் இந்த நிலைமை காணப்படுகின்றது.
இந்தியா இந்த விடையத்தில் நடு நிலை வகித்துள்ளது.இதனை மிக மோசமானா செயலாகவே பார்க்கின்றோம்.
பிரேரணையை ஆதரித்திருக்க வேண்டும்.அல்லது எதிர்த்திருக்க வேண்டும். இலங்கைக்கு சார்பாக ஒரு நிலைப்பாட்டை எடுக்கக்கூடிய பூகோள அரசியலினுடைய ஒரு சித்தார்ந்தத்திலேயே இந்தியா இவ்வாரான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
இந்தியாவிற்காக பரிந்து பேசுகின்ற தமிழ் கட்சிகள் அல்லது வடக்கின் மூன்று தீவுகளை சீனாவுக்கு கொடுக்கப் போகின்றார்கள் என போரட்டத்தை முன்னெடுத்த தமிழ் கட்சிகள் இன்றும் கூட இந்தியாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருக்கின்றனர் என்ற சூழல் மிக வேதனையளிக்கின்றது.
சீனா ஒரு வலுவான நிலைப்பாட்டில் இலங்கைக்கு ஆதரவாக வந்துள்ளதோ அதே போல் ஒரு நிலைப்பாட்டில் இந்தியாவும் செயற்பட்டிருக்க வேண்டும்.
பாதீக்கப்பட்ட தமிழர் தரப்பிற்கு ஒரு நீதியை பெற்றுக்கொடுக்கின்ற நிலைப்பாடாக முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டுமே தவிர இந்தியா மீண்டும், மீண்டும் அவர்கள் சீனா பக்கம் சென்று விடுவார்கள் என்கின்ற ஒரே நிலைப்பாட்டிற்காக இந்தியா இவ்வாறு மதில் மேல் பூனையாக இருப்பது மிகவும் வருந்தத்தக்க விடையமாக உள்ளது.
அவர்களுக்காக எம்மவர்கள் பரிந்து பேசுவது அதனை விட மோசமான விடையமாக உள்ளது. மிகப் பெரிய நாடு இந்தியா. ஜெனிவா சென்று மிகச் சிறிய இலங்கைக்காக 13 ஆவது சரத்தை நடை முறைப்படுத்துங்கள். மாகாண சபை தேர்தலை நடத்துங்கள் என்று கேட்பது இந்தியாவின் இராஜ தந்திரத்தின் மிகப் பெரிய தோழ்வியும்,பின்டைவாகவுமே பார்க்கக்கூடியதாக உள்ளது.
இவ்விடையத்தில் தமிழர் தரப்பு எதிர் காலத்தில் ஐக்கியமாகவும், ஒற்றுமையாகவும், இணைந்து செயல் பட வேண்டிய பொறுப்பும், தார்மிக கடற்பாடும் எங்களுக்கு உள்ளது.
இவ்வாறு இல்லாது விட்டால் எதிர் காலத்தில் இதன் விளைவுகளை நாங்கள் எவ்வாறு எதிர் கொள்ள போகின்றோம் என்கின்ற நிலை எங்களுக்கு உண்டு.
கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை எதிர் கொண்டுள்ள சமூகம் எல்லோறும் ஐக்கியத்துடன் இயங்க வேண்டும்.
ஜெனிவா விடையத்தில் நாங்கள் ஒரு கடிதம் அனுப்பி இருந்தோம். ஏனைய கடிதங்கள் அனுப்புகின்ற விடையத்தில் கட்சிகளுக்குள் முறண்பாடுகள் ஏற்பட்டு விட்டது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பு பேசிக்கொண்ட நிலைப்பாட்டிற்கு அப்பால் தாங்கள் சுயாதீனமாக ஏனைய நாடுகளுக்கு ஒரு கடிதம் அனுப்ப முற்பட்டமையும், சுயாதீனமாக சந்திப்புக்களை மேற்கொண்டு விடையங்களை தனித்துவமாக முன்னெடுக்க முற்பட்டமையும் கூட்டுப் பொறுப்பில் இருந்து விலகுகின்ற நிலையாகும்.
தாங்கள் மாறுபட்ட கருத்துக்களை ஊடகங்கள் மூலம் மாறி மாறி குற்றம் சாட்டுவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
கூட்டுப்பொறுப்போடும், ஐக்கியத்தோடும்,தமிழ் மக்களின் எதிர் கால நலனை கருத்தில் கொண்டு விட்டுக் கொடுப்போடு எல்லோறும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற பொறுப்பு எல்லோர் மீதும் தினிக்கப்பட்டுள்ளது.
தமிழ் கட்சிகள் எதிர் காலத்திலாவது தங்களின் நிலைப்பாட்டை புறிந்து கொண்டு செயற்பட வேண்டும்.
ஒன்றோடு,ஒன்று இணைந்து செயற்படுகின்ற போது,கூட்டுப்பொறுப்பை மதிக்கின்றவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் எதிர் காலத்தில் இந்த நிலமைகளை எல்லாம் நாங்கள் எதிர் கொள்வதில் பல்வேறு விதமான சிரமத்தை எதிர் கொள்ள நேரிடும்.என அவர் மேலும் தெரிவித்தார்.
-இதே வேளை குறித்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு மனித உரிமைகள் செயட்பாட்டாளர் அருட்தந்தை எஸ்.ஜெயபாலன் குரூஸ் அடிகளார் கருத்துக்களை முன் வைத்தமை குறிப்பிடத்தகக்து.