(மன்னார் நிருபர்)
(27-03-2021)
மன்னார் பஸார் பகுதியில் உள்ள பல்பொருள் விற்பனை நிலையங்கள் சிலவற்றில் விற்பனை செய்யப்படும் ‘அரலிய கீரி சம்பா’ அரிசியை கொள்வனவு செய்வதில் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.
‘அரலிய கீரி சம்பா’ அரிசி 5 கிலோ மற்றும் 10 கிலோ பொதிகளில் மன்னார் பஸார் பகுதியில் உள்ள பல்பொருள் விற்பனை நிலையங்கள் சிலவற்றில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
எனினும் குறித்த அரி பொதியை மாத்திரம் நுகர்வோர் கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த ‘அரலிய கீரி சம்பா’ அரிசி பொதியை கொள்வனவு செய்வதாக இருந்தால் நுகர்வோர் குறித்த விற்பனை நிலையங்களில் ஆயிரம் ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை ஏனைய அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டும் எனவும், அவ்வாறு பொருட்களை கொள்வனவு செய்தால் மாத்திரமே ‘அரலிய கீரி சம்பா’ அரிசியின் ஒரு பொதி மாத்திரமே வழங்கப்படும் என குறித்த வர்த்த நிலைய உரிமையாளர் தெரிவிப்பதாக நுகர்வோர் விசனம் தெரிவித்துள்ளனர்.

எனவே இவ்விடையத்தில் மன்னார் மாவட்ட நுகர்வோர் அலுவலக அதிகார சபை அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு, இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். என நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.