ஈழத்தமிழர் அரசியலில் பொதுவாக்கெடுப்பினை ஆயுதமாக முதலில் கையேந்தி தலைவராகிய தந்தை செல்வாவின் பிறந்தநாளான இன்று புதன்கிழமை , பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தின் கருத்தரங்கொன்று கனடாவில் இடம்பெறுகின்றது.
தமிழர் தலைவிதி தமிழர் கையில் என்ற முழக்கத்துடன், ஈழத்தமிழ் மக்கள் தாம் எந்த அரசியல் ஏற்பாட்டுக்குள் வாழ வேண்டும் என்பதனை அவர்களே தீர்மானிக்கும் வகையில், பொதுவாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டும் என்ற இலக்குடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் இந்த இயக்கம் தோற்றுவிக்கப்பட்டிருந்தது.
கனேடிய நேரம் மாலை 6 மணிக்கு இணையவழியே இடம்பெற இருக்கின்ற இக்கருத்தரங்கில், மலேசியாவின் பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி, தமிழ்நாட்டில் இருந்து மத்ராஸ் பல்கலைக்கழக பொருளியில் பேராசிரியர் கலாநிதி நாகநாதன், மற்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் ஆகியோர் கருத்துரைகளை முன்வைக்க இருக்கின்றனர்.
ZOOM செயலி மூலம் ( Meeting ID: 875 9167 2409 ) இடம்பெறுகின்ற இக்கருத்தரங்கில் அனைத்த தமிழ் உறவுகளையும் பங்கெடுத்துக் கொள்ளுமாறு பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது.