இலங்கை அரசின் தமிழர் படுகொலையின் ஞாபகார்த்த சின்னம் அமைக்க ஒன்றாக இணைந்துள்ள மார்க்கம் நகரசபையின் ஆறு கவுன்சிலர்கள்
கனடாவில் உள்ள மார்க்கம் நகரசபையானது பல்வேறு வழிகளில் தமிழர் நலன் காக்கவும், தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யவும் பல வழிகளிலும் கடந்த பல ஆண்டுகளாக துணையாக உள்ளது. குறிப்பாக தமிழர் மரபுரிமை நாளை முதன் முதலாக அங்கீகரித்து அதனை வருடாந்தம் கொண்டாடியும் வருகின்றது. இதே போன்று அண்மையில் முன்னாள் நகரசபை அங்கத்தவரும் தற்போதைய மாகாண அரசின் உறுப்பினருமான திரு லோகன் கணபதியின் அயராக முயற்சியின் பலனாக மேற்படி மார்க்கம் நகரசபையானது ‘வன்னி வீதி” என்னும் பெயரை நகரசபையின் எல்லைக்குள்ள உள்ள வீதி ஒன்றுக்கு சூட்டிய தமிழர்களின் வன்னி மண்ணுக்கு புகழாரம் சூட்டியது.
இந்த வரிசையில், அண்மைக்காலமாக உலகெங்கும் பேசப்பட்டுவரும் இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் மற்றும் தமிழர் மீதான படுகொலைகள் ஆகியவை தொடர்பாகவும் மார்க்கம் நகரசபையின் அங்கத்தவர்கள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.
குறிப்பாக மார்க்கம் நகரசபையின் 7ம் வட்டார அங்கத்தவரான Usman, மற்றும் பிராந்திய கவுன்சிலரான Jim Jones மற்றும் ஆகியோர் உட்பட ஏனைய நான்கு கவுன்சிலர்களான, Joe li, Amanda Colluchi, Isa Li Councillor Ho ஆகியோர் இணைந்து இந்த முயற்சியில் இணைந்து அண்மையில் மார்க்கம் நகரசபையில் இதற்கான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்து அதன் முதலாவது வாசிப்பை நிகழ்த்தினார்கள். இதற்கு தற்போதைய மார்க்கம் நகரசபையின் மேயர் அவர்களும் தனது முழு ஆதரவையும் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இந்த நினைவுத்தூபியை மார்க்கம் நகர சபையின் எல்லைக்குள் அமைக்கும் போது, அந்த சபையின் எல்லைக்கும் வசிக்கும் ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல, கனடாவிலும் அமெரிக்காவிலும் வசிக்கும் தமிழ் மக்களும் இந்த நினைவுத் தூபியை நேரில் கண்டு இலங்கை அரசினால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி தமிழ் மக்களை என்று நினைவிற் கொள்வதற்கு சான்றாக விளங்கும் என்றும் மேற்படி கவுன்சிலர்களின் சார்பின் கனடா உதயன் ஊடகத்திற்கு தகவல் தந்த திருமதி மேர்லின் தெரிவித்தார்.
மேற்படி தீர்மானத்தை மார்க்கம் நகரசபையில் அங்கீகரிப்பதற்கு குறைந்தது 7 கவுன்சிலர்களின் ஆதரவு தேவை என்றும் திருமதி மேர்லின் மேலும் தெரிவித்தார்.
Thank you to Councillor Khalid Usman, Regional councillor Jim Jones, Regional councillor Joe li, Councillor Amanda Colluchi, Councillor Isa Li and Councillor Ho for supporting the Tamil Community.