அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற இரு வேறு விதமான சம்பங்களில் சம்பந்தப்பட்ட பொலிஸ்காரர்கள் பற்றி நாடே பேசுகின்ற வகையில் செய்திகள் வெளியாகியுள்ளன. தென்னிலங்கையில் ஒரு கொடியவரான ஒரு பொலிஸ்காரர் சம்பந்தப்பட்ட ஒரு செய்தியும் யாழ்ப்பாணத்தில் மனித நேயமிக்க ஒரு தமிழ் பேசும் பொலிஸ்காரர் பற்றிய செய்திகளே இலங்கையின் பொலிஸ் வட்டாரத்தில் பேசப்படும் வகையில் உள்ளன என எமது செய்தியாளர் அறிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்டிருக்கும் யாழ். நகர் மத்திய பகுதியில் உணவின்றி தவித்த விடேச தேவையுடைய ஒருவருக்கு யாழ். பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் உணவளித்த காட்சி பலரது மனதை தொட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வரும் இந்தக் காட்சி பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. அண்மையில் தென்னிலங்கையில் நடு வீதியில் வைத்து சாரதி ஒருவரை மிதித்து தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பற்றிய காட்சிகள் வெளியாகி சிங்கள மக்களையே ஆத்திரமடைய வைத்த செய்திக்கு மத்தியில் இத்தகைய நல்ல பொலிஸ் அதிகாரிகளின் செயலையும் நாங்கள் பாராட்ட வேண்டும். இவர் யாழ். பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.