ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள்
“ராஜயோகம்”
Dr. K. RAM.Ph.D (USA)
தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377
மேஷம் :
அன்பும், அரவணைப்பும் கிடைக்கக்கூடிய அமைதியான வாரம். சோதனைகள் நீங்கும். குடும்ப ஒற்றுமை பலப்படும். உடல் நலம் திருப்தி தரும். மன அமைதி குறையும். திருமண வாய்ப்பு கூடும். மாணவர்கள் திறமை பளிச்சிடும். பொறியியல் துறை லாபம் தரும். ஏற்றுமதி தொழிலில் கவனம் தேவை. பேச்சு திறமை அதிகரிக்கும். உழைப்பில் கவனம் தேவை. வீண் செலவுகள் அதிகரிக்கும்.
வழிபடவேண்டியதெய்வம்: அக்னிலிங்கப்பெருமாள்
அதிர்ஷ்ட எண் – 5, 7, 9, 0; அதிர்ஷ்ட நிறம் – முட்செவ்வந்தி, அதிர்ஷ்ட எழுத்துக்கள் – S, U;
ரிஷபம் :
ஏராளமான பணவரவு கிடைக்கக் கூடிய எதார்த்தமான வாரம். சுய வீடு வாங்க முயற்சி செய்யலாம். மங்களமான நாள். அரசு வாய்ப்பு தடைப்படும். கணவன், மனைவி சச்சரவு ஏற்படும். கலைத்துறையில் முன்னேற்றம் கொடுக்கும். பயணம் அனுகூலம் தரும். திருமண முயற்சி வெற்றி தரும். பணத்தட்டுப்பாடு ஏற்படும். தோற்றப் பொலிவு கூடும். நல்லவர் நட்பு கிட்டும். எதிரிகள் பலம் குறையும். பிரார்த்தனையால் பலன் உண்டு.
வழிபடவேண்டியதெய்வம்: பட்டத்தரசியம்மன்
அதிர்ஷ்ட எண் – 9, 4, 3, 1; அதிர்ஷ்ட நிறம் – மஞ்சள், அதிர்ஷ்ட எழுத்துக்கள் – K, Z;
மிதுனம் :
நிம்மதியும் வெகுமதியும் நிதர்சனமாக கிடைக்கக் கூடிய நிலையான வாரம்.. வெளிநாட்டுப் பயணம் உண்டு, கணவன், மனைவி சச்சரவு ஏற்படும். முன் கோபம் தவிர்க்கவும். பயணம் பலன் தரும். புதிய முயற்சியில் கவனம் தேவை. மாணவர்களுக்கு உற்சாகம் கூடும். வர்த்தக தொழில் லாபம் தரும். பதவி உயர்வு தடைப்படும். பொருளாதார சிக்கல் நீடிக்கும். சிரமங்கள் அதிகரிக்கும். பெற்றோர்களால் பாராட்டு பெறுவீர்கள்.
வழிபடவேண்டியதெய்வம்: ஹோரம்பகணபதி
அதிர்ஷ்ட எண் – 3, 8, 2, 9; அதிர்ஷ்ட நிறம் – காவி நிறம், அதிர்ஷ்ட எழுத்துக்கள் – L, X;
கடகம் :
வெளிப்படையான ஆசைகள் பூர்த்தியாகக்கூடிய நேர்த்தியான வாரம். தொழில் லாபம் கூடும். புதிய எண்ணங்கள் உருவாகும்.வெகுமதி கூடும் நாள். பால்ய நண்பர்களை சந்திக்க நேரிடும். பிள்ளைகளால் தொல்லை உண்டாகும். வழக்கு முடிவுக்கு வரும். மருத்துவர்களுக்கு நற்பெயர் கிட்டும். புதிய சொத்து சேரும். மாற்று இன உதவி கிட்டும். ஆடை அணிகலன் சேரும். மருத்துவச் செலவு உண்டு. பெண்களுக்கு கவனம் தேவை.
வழிபடவேண்டிய தெய்வம்: வீரஅண்ணாமலையார்
அதிர்ஷ்ட எண் – 5, 2, 6, 3; அதிர்ஷ்ட நிறம் – ஆழ்ந்த சிகப்பு, அதிர்ஷ்ட எழுத்துக்கள் – O, G;
சிம்மம் :
தியாகமும், யோகமும் திருப்தியோடு அமையக்கூடிய அற்புதமான வாரம்.. புதிய வாய்ப்புக்கள் உருவாகும். மேலதிகாரியின் பாராட்டு கிட்டும். பெருமைகள் சேரும். குடும்ப அன்யோன்யம் கூடும். பணத் தேவை அதிகரிக்கும். எதிர்பார்த்த விஷயம் தாமதமாகும். புகழ் கூடும். அந்தஸ்து உயரும். உறவினர் ஒன்றுமை ஏற்படும். பொறுப்புகள் சிறப்பு சேர்க்கும். தனவரவு உண்டு. மனகசப்பு நீங்கும். நிதி நிலைமை திருப்தி தரும். புதிய வாய்ப்புக்கள் உருவாகும்.
வழிபடவேண்டிய தெய்வம்: ஜலகண்டேஸ்வரர்
அதிர்ஷ்ட எண் – 8, 2, 5, 0; அதிர்ஷ்ட நிறம் – கருப்பு (கருமை), அதிர்ஷ்ட எழுத்துக்கள் – Y, D;
கன்னி :
பிள்ளைகளின் நேசம் பெருவாரியாகக் கிடைக்கக்கூடிய அற்புதமான வாரம். புதிய கடன் வாங்க நேரிடும். மனதில் உற்சாகம் கூடும். சொத்து சேர்க்கை உண்டு. உழைப்பில் கவனம் தேவை. கோரிக்கை நிறைவேறும்.மனை வாங்கும் யோகம் உண்டு. பொருளாதார வளம் மேம்படும். மன மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிரிகள் பலம் குறையும். வீடு, மனை யோகம் உண்டு. வழக்கு வெற்றி தரும்.
வழிபடவேண்டிய தெய்வம்: தேவிசெல்வநாயகி
அதிர்ஷ்ட எண் – 1, 8, 2, 5; அதிர்ஷ்ட நிறம் – ஊதா, அதிர்ஷ்ட எழுத்துக்கள் – N, A;
துலாம் :
அர்ச்சனையால் பிரச்சனை ஓய்ந்து கர்ஜனையோடு வலம் வரக்கூடிய அற்புத வாரம். காதல் பிரிவை ஏற்படுத்தும். வீண் குழப்பங்கள் வந்து போகும். உடல் நலம் மேம்படும். முயற்சிகளில் தாமதம் ஏற்படும். வியாபாரம் வெற்றி தரும். புதிய முயற்சிகள் கை கூடும். நண்பர்கள் உதவி கிட்டும். குடும்பத்தில் அமைதி உண்டு. அயல் நாட்டுப் பயணம் உண்டு. அரசியல்வாதிகளுக்கு அற்புதமான நாள். பித்ருக்கள் சாபம் நீங்கும். மங்களச் செய்தி வரும்.
வழிபடவேண்டியதெய்வம்: மாங்கல்யேஷ்வரர்
அதிர்ஷ்ட எண்: 1, 4, 9, 3; அதிர்ஷ்ட நிறம்: ஆழ்ந்த சிவப்பு, அதிர்ஷ்ட எழுத்துக்கள்: D, V;
விருச்சிகம் :
நிதிநிலை நிலையாகப் பெருகக்கூடிய நிதர்சனமான வாரம். நல்லோர்களின் சந்திப்பு கிட்டும். வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது. புதிய சிந்தனை உருவாகும். கண்ணாடிப் பொருட்கள் சேதமாகும். எதிர்ப்புகள் தவிடுப் பொடியாகும். அதிகாரியின் பாராட்டு கிடைக்கும். வி.ஐ.பியின் தொடர்பு கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் தேவை. ஞாபக மறதி ஏற்படும். வெளி வட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். வேண்டாத நபர்கள் விலகுவர்.
வழிபடவேண்டியதெய்வம்: அன்னமார்சுவாமி
அதிர்ஷ்ட எண்: 4, 2, 7, 0; அதிர்ஷ்ட நிறம்: இளம் ஊதா, அதிர்ஷ்ட எழுத்துக்கள்: H, Q;
தனுசு :
நுண்ணறிவைப் பயன்படுத்தி மென்மேலும் உயரக்கூடிய உன்னதமான வாரம்.. மனதில் மகிழ்ச்சி கூடும். நட்பு வட்டம் விரிவடையும். கலைஞர்களுக்கு ஒப்பந்தங்கள் குவியும். பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். உறவினர் வருகை உண்டு. பொறாமைகள் விலகும் நாள். வியாபாரம் வெற்றி தரும். முயற்சிகள் தாமதமாகும். நீண்ட நாளைய நோய் விலகும். தொழில் முயற்சி வெற்றி தரும். நண்பர்கள் உதவி கிட்டும். சுபக்காரியங்கள் நடந்தேறும். இல்லத்தில் அமைதி பெருகும்.
வழிபடவேண்டியதெய்வம்: படைவீட்டம்மன்
அதிர்ஷ்ட எண்: 0, 9, 3, 6; அதிர்ஷ்ட நிறம்: செம்மஞ்சள், அதிர்ஷ்ட எழுத்துக்கள்: S, F;
மகரம் :
மலையளவு நன்மைகள் கிடைக்கக்கூடிய மகத்தான வாரம். புது முயற்சிகள் பலன் அளிக்கும். பணம் புரளும். எதிலும் வெற்றி கிட்டும். ஏற்றம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். வாழ்க்கைத் துணையால் வளம் பெருகும். பாலிய நண்பர் சந்திப்பு கிட்டும். பொருளாதாரம் மேம்படும். பேச்சில் கவனம் தேவை. கடன் பாக்கிகள் வசூலாகும். வாகன யோகமுண்டு. ஆபரணச் சேர்க்கை உண்டு. அதிகாரம் குவியும். சகோதர வழியில் கவனம் தேவை.
வழிபடவேண்டிய தெய்வம்: வேம்புலியம்மன்
அதிர்ஷ்ட எண் – 6, 0, 7, 4; அதிர்ஷ்ட நிறம் – ஆழ்ந்த வெண்மை, அதிர்ஷ்ட எழுத்துக்கள் – I, S;
கும்பம் :
பிரியமானவர்களை சந்திக்கக் கூடிய சந்தோஷமான வாரம்.. கடன் சுமை குறையும். கன்னிப் பெண்களின் விருப்பம் ஈடேறும். கணவன், மனைவி உறவு தித்திக்கும். சுப காரியங்கள் இல்லத்தில் இனிதே நடந்தேறும். வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிட்டும். பணநடமாட்டம் கூடும். இயற்கை காட்சிகளை கண்டு இன்புறுவீர்கள். உல்லாசப் பயணம் இனிக்கும். அணிமணிகள் சேரும். பெண்களுக்கு யோகம் கூடும். பணப்புழக்கம் சரளமாகும்.
வழிபடவேண்டியதெய்வம்: ஓம்கார சுயம்புலிங்கம்
அதிர்ஷ்ட எண் – 4,, 2, 1, 0; அதிர்ஷ்ட நிறம் – சிவப்பு (செந்நிறம்), அதிர்ஷ்ட எழுத்துக்கள் – F, K;
மீனம் :
உண்மையான வரவு கிடைக்கக் கூடிய நன்மையான வாரம். வாகன மாற்றம் உண்டாகும். மன அமைதி சீர்குலையும். மறைமுக எதிர்ப்பு விலகும். பயணங்களால் இடையூறு ஏற்படும். ஆன்மீக சிந்தனை அதிகமாகும். பிள்ளைகள் வழியில் தொல்லைகள் கூடும். பெற்றோர்கள் நலனில் அக்கறை கூடும். எதிரிகளின் தொல்லை குறையும். தொட்டது துலங்கும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். ஜீவராசிகளுக்கு உணவு அளித்தால் யோக பலன் கூடும்.
வழிபடவேண்டிய தெய்வம்: பிரம்மசக்திஅம்மன்
அதிர்ஷ்ட எண் – 5, அதிர்ஷ்ட நிறம் – ஆழ்ந்த சிகப்பு, அதிர்ஷ்ட எழுத்துக்கள் – O, M.