கனடா உதயன் மற்றும் நண்பன் இணையத்தளம் ஆகியவற்றின் இலங்கைப் பிரதிநிதியும், பிளக்ஸ் விளம்பர முகவர் நிறுவனம் மற்றும் பிளக்ஸ் வரைகலை நிறுவனம் ஆகியவற்றின் பங்காளருமான திரு விஜேய் பழனிசாமிக்கு இலங்கையில் சிறந்த விளம்பர முகவர்களில் ஒருவர் என்னும் அரச விருது விருது அண்மையில் வழங்கப்பெற்றுள்ளது.
அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற அரச வைபவம் ஒன்றில் விஜேய் பழனிசாமி அவர்கள் தனக்குரிய விருதினை இலங்கையின் அமைச்சர் ஒருவரிடமிருந்து பெற்ற பின்னர் அவரோடு நிற்பதைக் காணலாம்.
கனடாவிற்கு சில தடவைகள் வந்து சென்ற விஜேய் அவர்கள் இன்றும் கனடாவில் பல வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.