ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல் மற்றும் பொருளாதார துறைகளில் கொண்டுள்ள நீண்ட கால நட்பு காரணமாகவே இலங்கையிடமிருந்து சில விடயங்களை அமெரிக்கா எதிர்பார்க்கின்றது . குறிப்பாக இலங்கை அரசின் சில நடவடிக்கைகள் மனித உரிமைகள் தொடர்பான அதன் ஈடுபாட்டையும் அக்கறையையும் எமக்கு காட்டுகின்றனவாக இல்லை. இதனால் தான் பாதிக்கப்பட்ட சிறுபான்மைச் சமூகமாக விளங்கும் தமிழ்ச் சமூகம் பற்றிய கேள்விகளை நாம் இலங்கையிடம் எழுப்ப வேண்டியுள்ளது என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலய்னா கொழும்பில் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள ஆங்கில ஊடக நிறுவனம் ஒன்றுக்கு அவர் வெளியிட்ட கருத்துக்கள் தற்போது பொது இடங்களில் காணக்கூடியதாக உள்ளது.
மேற்படி ஊடக அறிக்கை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலய்னா தொடர்ந்து தெரிவிக்கையில் ” இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பாகவும் சிறுபான்மை இனங்கள் மீதான பாதிப்புக்கள் தொடர்பாகவும் நாம் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம். குறிப்பாக தமிழ் ம க்கள் மீதான நடவடிக்கைகளில் எவை அந்த மக்களை பாதிக்கின்றன என்பதையும் புரிந்துள்ளோம். எனவே தமிழ் மக்கள் தொடர்பான விடயங்களில் இலங்கை அரசு உடனயாக அக்கறை எடுக்க வேண்டும். அத்துடன் தமிழ் மக்களைப் பாதிக்கும் விடயங்கள் தொடர்பாக உள்ள பொறுப்புக் கூறல் சம்பந்தமாகவும் இலங்கை அரசு உடனடியாக தனது நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் என்றும் நான் நம்புகின்றேன்” என்றார் அவர்.