இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 4 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன புதன்கிழமை உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஏற்கனவே 598 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 4 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 602 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
இவ்வாறு மரணமடைந்தவர்களில் இருவர் நேற்றும் (12), இருவர் நேற்று முன்தினமும் (11) மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
599ஆவது மரணம்
மஹரகம பிரதேசத்தைச் சேர்ந்த, 76 வயதான ஆண் ஒருவர், ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் இருந்து, மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கும் அங்கிருந்து IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று முன்தினம் (11) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 நியூமோனியா, உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, என அறிவிக்கப்பட்டுள்ளது.
600ஆவது மரணம்
அக்குரஸ்ஸை பிரதேசத்தைச் சேர்ந்த, 71 வயதான பெண் ஒருவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று (12) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், குருதி விஷமடைவு அதிர்ச்சி, உக்கிர சிறுநீரக பிரச்சினை, நாட்பட்ட நீரிழிவு நிலை, உச்ச தைரொயிட் நிலை, குருதியில் கொலஸ்ட்ரோல் நிலை அதிகரிப்பு மற்றும் Bronchial Asthma (மூச்சுக்குழல் குறுகலடைவு) நிலை, என அறிவிக்கப்பட்டுள்ளது.
601ஆவது மரணம்
நாராஹேன்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த, 74 வயதான பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று (12) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 தொற்று, நாட்பட்ட நுரையீரல் நோயுடன் குருதி விஷமடைவு, வலது நுரையீரலில் பிரச்சினை, என அறிவிக்கப்பட்டுள்ளது.
602ஆவது மரணம்
காலி பிரதேசத்தைச் சேர்ந்த, 45 வயதான ஆண் ஒருவர், மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அங்கு மரணமடைந்துள்ளார். இவரது மரணம் நேற்று முன்தினம் (11) நிகழ்ந்துள்ளது. இவரது மரணத்திற்கான காரணம், கொவிட்-19 உடன் இரத்தக் கசிவு மற்றும் இலுக்கேமியா நிலை, என அறிவிக்கப்பட்டுள்ளது.