தனது ஆட்சிக் காலத்தில் உலகெங்கும் மக்களின் எதிர்ப்பைச் சம்பாதித்தவர் மறைந்த ஹிட்லர் என்றால் அது மிகையாகாது. மில்லியன் கணக்கானவர்களின் இறப்புகளிற்கும் மனித துயரங்களிற்கும் காரணமாகவிளங்கியவர் ஹிட்லர் அவர் அரசியல்வாதிகளிற்காக முன்னுதாரணம் இல்லை என இலங்கைக்கான ஜேர்மனியின் தூதுவர் ஹோல்ஹெர் சூபேர்ட் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச ஹிட்லராக மாறும் சாத்தியக்கூறுகள் குறித்து இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ள கருத்து குறித்து டுவிட்டரில் பதிவு செய்துள்ள கருத்திலேயே தூதுவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் இது குறித்து தெரிவித்துள்ளதாவது.
இவ்வாறு கருத்து தெரிவிப்பவர்களிற்கு நான் ஒரு விடயத்தை நினைவுபடுத்த விரும்புகின்றேன் – மில்லியன் கணக்கான இறப்புகளுக்கும் கற்பனைக்கு அப்பாற்றபட்ட மனித துயரங்களுக்கும் விரக்திக்கும் காரணமாகயிருந்தவர் ஹிட்லர்.
எந்த அரசியல்வாதிக்கும் ஹிட்லர் நிச்சயமாக முன்மாதிரியில்லை என இலங்கைக்கான ஜேர்மனியின் தூதுவர் ஹோல்ஹெர் சூபேர்ட் குறிப்பிட்டுள்ளார்
ஒரு சர்வாதிகாரி போன்று செயற்படுவார் என எதிர்பார்த்தே மக்கள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு வாக்களித்தனர் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்திருந்தது .இங்கு குறிப்பிடத்தக்கது.